சிவக்குமாருக்கு அக்.1 வரை கோர்ட் காவல்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவக்குமாருக்கு, அக்.1 வரை, கோர்ட், காவல்

புதுடில்லி: கர்நாடக காங். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான இடங்கில் நடத்திய சோதனையில் ரூ.8.50 கோடி சிக்கிய வழக்கினை அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்ஜாமீன் கோரி மனுவும் தள்ளுபடி ஆனதால், கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர். டில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில்நடந்த விசாரணையில் சிவக்குமாரின் நீதிமன்ற காவலை 14 நாட்கள் ( அக்.1-ம்) நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிவக்குமார் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக சிவக்குமார் உடல் சோர்வுற்றதால் மருத்துவ சிகிச்சை கோரியதையடுத்து நீதிபதிகள் , டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என சான்று அளித்தால், அவரை முதலில் மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-செப்-201919:55:07 IST Report Abuse
 nicolethomson செத்தாண்டா சேகர் , ஏற்கனவே வொக்கலிகர் பெல்ட்டில் வேறு ஒரு ஸ்கீம் ஓடிக்கிட்டு இருக்கு , சீக்கிரம் கருநாடக செய்திகளில் மீண்டும் அடிபடும் நாள் தூரத்தில் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X