ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்:ஆய்வில் அதிர்ச்சி தகவல்| 46% Mumbai college students addicted to child porn, 10% girls go for abortion during college: Survey | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்:ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (20)
Share
மும்பை: 16 முதல் 22 வயதுடைய மாணவ, மாணவிகள் குழந்தைகள் குறித்த ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மாணவ மாணவயரிடையே பாலியல் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் 30 ஆங்கில பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.இதன்படி குறைந்தது

மும்பை: 16 முதல் 22 வயதுடைய மாணவ, மாணவிகள் குழந்தைகள் குறித்த ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.latest tamil newsமும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மாணவ மாணவயரிடையே பாலியல் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது. இதில் 30 ஆங்கில பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

இதன்படி குறைந்தது 33சதவீத மாணவர்களும், 24 சதவீத மாணவிகளும் ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகி உள்ளனர். தங்களின் நிர்வாண படங்களை செல்போனில் பகிர்ந்துள்ளனர்.


latest tamil news40 சதவீத கல்லூரி மாணவர்கள் தங்களின் லேப்டாப் கம்பயூட்டர் மூலம் வன்முறை , ஆபாச வீடியோக்களை பார்ப்பதாகவும், ஒரு மாணவ, மாணவியர் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 40 ஆபாச வீடியோக்களை பார்பதாகவும், நாள் ஒன்றுக்கு மும்பையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆபாச வீடியோக்கள் பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தவிர 25 சதவீத மாணவர்கள் ஆபாச வீடியோக்களை பார்த்து அது போன்ற செயலை செய்ய தங்களை தூண்டுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 46 சதவீதத்தினர் ஆபாச பட மோகத்திற்கு அடிமையாகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடத்திய ஆய்வில் கல்லூரி மாணவியர்களில் 10 சதவீதம் பேர் ஆபாச படம் பார்த்து தவறான உறவால் கருக்கலைப்பு வரை செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், மும்பையில் மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 4 ஆயிரம் கல்லூரி மாணவிகள் கருக்கலைப்பு செய்வதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து உளவியலாளர்கள் கூறுகையில் இது போன்ற சம்பவங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, பெரியவர்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இது போதை பொருளை போன்றது. இது பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் சம்பவங்களுக்கு வழி வகுக்கும் .இவ்வாறு அவர் கூறி உள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X