பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இதே நாளில் அன்று

செப்டம்பர் 18, 1925 தமிழறிஞர், இரா.சாரங்கபாணி:

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே, தேவங்குடி ஊரில், பொ.ராஜகோபால் மழவராயர் -- சனமாலிகை தம்பதிக்கு மகனாக, 1925 செப்., 18ல் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலையில், தமிழ் பயின்று, 1947ல், புலவர் பட்டமும், 1949ல், பி.ஓ.எல்., பட்டமும் பெற்றார். காரைக்குடி, அழகப்பா கல்லுாரியில், தமிழ்த் துறையில் பேராசிரியராகவும், தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார். 1979 முதல், மூன்றாண்டுகள், உயர் ஆய்வு நடுவத்தின் இயக்குனராக இருந்தார்.இவர் எழுதிய, பரிபாடல் திறன், மாணிக்கச் செம்மல் ஆகியவை, தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான பரிசுகளைப் பெற்றுள்ளன. குன்றக்குடி ஆதீனத்தின் பெரும்புலவர் பட்டம், மதுரை, காமராஜர் பல்கலை சார்பில், தமிழ் பேரவை செம்மல் பட்டம் பெற்றவர். 2010 ஆக., 23ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
18-செப்-201906:07:27 IST Report Abuse
 N.Purushothaman இவர்களை போன்றோர் தமிழுக்கு செய்த தொண்டுகளை அணைத்து தரப்பினருக்கும் கொண்டு சென்று அவர்களின் அர்ப்பணிப்பை புரிய வைக்க வேண்டும் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X