பகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் ஐக்கியம் 'இது பச்சை துரோகம்' என மாயாவதி பாய்ச்சல்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
 பகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் ஐக்கியம் 'இது பச்சை துரோகம்' என மாயாவதி பாய்ச்சல்

ஜெய்ப்பூர், :ராஜஸ்தான் மாநிலத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த, ஆறு, எம்.எல்.ஏ.,க்களும், நேற்று, ஆளும் கட்சியான காங்கிரசில் இணைந்தனர். ''இது, பச்சை துரோகம்,'' என, மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆதரவு வாபஸ்இங்கு, கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 200 தொகுதிகளில், காங்கிரஸ், 100 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஆறு, எம்.எல்.ஏ.,க்கள், 12 சுயேச்சைகள், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் ஓர் உறுப்பினர் ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. சமீபகாலமாக, காங்கிரசுக்கும், மாயாவதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காங்கிரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக, மாயாவதி, அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின், ஆறு, எம்.எல்.ஏ.,க்களும், நேற்று, காங்கிரசில் அதிரடியாக இணைகின்றனர். காங்கிரசில் சேரவுள்ளதாக, சபாநாயகர், சி.பி.ஜோஷிக்கு, இவர்கள் கடிதம் எழுதிஉள்ளனர். 'மாநிலத்தின் நலன் கருதியும், மக்களின் நலன் கருதியும், காங்கிரசில், எங்களை இணைக்கிறோம்' என, கடிதத்தில், அவர்கள் கூறியுள்ளனர். நடவடிக்கைராஜஸ்தானில், பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், காங்கிரசில் சேர்ந்துள்ளதால், அவர்கள் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியினர் துரோகம் செய்து விட்டதாக, மாயாவதி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:நம்பத் தகுந்த கூட்டணி கட்சியில்லை என்பதை, காங்கிரஸ், மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தந்த எங்களுக்கு, அசோக் கெலாட், துரோகம் செய்து விட்டார். காங்கிரஸ், தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்கு எதிரான கட்சி. தங்களுக்கு யார் உதவுகின்றனரோ, அவர்களுக்கு துரோகம் செய்வது தான், அக்கட்சி தலைவர்களின் வழக்கம். இவ்வாறு, அவர் கூறினார். கடந்த, 2009ம் ஆண்டிலும், ராஜஸ்தானில், அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தான் நடந்தது. அப்போதும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த, ஆறு, எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசில் இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
19-செப்-201913:37:57 IST Report Abuse
narayanan iyer இல்லை இல்லை மாயாவதி அவர்களே. தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, நீங்கள்தானே காங்கிரஸுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று தினமும் சொல்லிவந்த நிலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. ஆதரவை வாபஸ் பெரும் அளவுக்கு போய் நீங்கள்தான் நம்பகத்தன்மையை அழித்திருக்கிறீர்கள். ஏன் ஏன் ஏன்?
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
18-செப்-201915:26:55 IST Report Abuse
Nallavan Nallavan எங்கே காங்கிரஸ் அடிமைகள் தெண்டம், செத்தப்புறம், சாலீஸ் அஹமத், ரோஷமில்லாவேலு??
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-செப்-201909:35:31 IST Report Abuse
Chowkidar NandaIndiaவந்தியத்தேவனை மறந்து விட்டீர்கள்....
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
18-செப்-201911:35:21 IST Report Abuse
Chowkidar NandaIndia இதற்கு எந்த கான்க்ராஸ் அடிவருடியும் வாய் திறக்க மாட்டார்கள். கான்க்ராஸ் என்ன மாய்மாலம் செய்தாலும் அவர்கள் கண்களுக்கு அதெல்லாம் தெரியாது. இதே பாஜக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் மட்டும் உடனே வரிந்து கட்டிக்கொண்டு ஓடி வந்து அழுது ஆர்பாட்டம் செய்து திட்டி தீர்ப்பார்கள். ஒருவேளை கான்க்ராஸ் என்ன அராஜகம் செய்தாலும் அதை கண்டுகொள்ளமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளார்களோ என்னவோ.......
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
20-செப்-201914:43:24 IST Report Abuse
Swaroopa Methaசில்லறை சில்லறை அதுதான் இவனுங்களுக்கு முக்கியம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X