வட மாநிலத்தவரை அவமதிப்பதா?: மத்திய அமைச்சர் மீது வழக்கு

Added : செப் 17, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
 வட மாநிலத்தவரை அவமதிப்பதா?: மத்திய அமைச்சர் மீது வழக்கு

பாட்னா, வட மாநிலத்தவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக, மத்திய அமைச்சர், சந்தோஷ் கங்வாருக்கு எதிராக, பீஹார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், சந்தோஷ் கங்வார், 70. பா.ஜ., வைச் சேர்ந்த இவர், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:

நாட்டில், வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை. வட மாநிலங்களுக்கு, பல நிறுவனங்கள், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக வருகின்றன. ஆனால், இங்கு, திறமையான தொழிலாளர்கள், ஊழியர்கள் கிடைப்பது இல்லை. இது தான், முக்கிய பிரச்னை.இவ்வாறு, அவர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு, வட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சமூக ஆர்வலர், தமன்னா ஹாஸ்மி என்பவர், பீஹார் மாநிலம், முஜாப்பர்நகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'வட மாநிலத்தவரை அவமதிக்கும் வகையில் பேசிய, மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வர் மீது, வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பி.எப்., வட்டி அதிகரிப்புசம்பளதாரர்கள் மகிழ்ச்சிஇ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான, வட்டி விகிதம், 8.55 சதவீதத்திலிருந்து, 8.65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர், சந்தோஷ் கங்வார், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:தொழிலாளர்களின், 2018 - 19ம் நிதியாண்டுக்கான, வட்டி விகிதம், 8.55 சதவீதத்திலிருந்து, 8.65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆறு கோடி தொழிலாளர்கள் பயன் அடைவர். இவ்வாறு, அவர் கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, மத்திய அறக்கட்டளை வாரியம் முடிவு செய்கிறது. வட்டி விகிதத்தை மாற்றி அமைப்பதில், மத்திய நிதி அமைச்சகத்துக்கும், அறக்கட்டளை வாரியத்துக்கும் இடையே, கருத்து வேறுபாடு நிலவியது. இந்நிலையில், பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில், வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது, மாத சம்பளதாரர்களிடையே, மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் அவர் ஆதங்கத்தை அவர் எங்கே சொல்லி ஆத்துவாருங்க? அமைச்சர் பதவிகள் ஏராளமா இருக்கு ஆனாலும் தகுதியான ஆளுங்க இல்லேன்னுதானே விம்மினார் இதுக்குப்போய் கேசு அது இதுன்னு விடுங்க
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-செப்-201906:03:58 IST Report Abuse
skv srinivasankrishnaveni உழைச்சுப் பிழைக்கவரும் வடநாட்டுக்காரனுக ஏமாந்தால் கொள்ளையும் அடிச்சுண்டு போறானே ,அதான் நடக்குதுங்க பலஇடங்களிலே கூலி கம்மி என்று இவள் வச்சுண்டுட்டு ஏமாற்றும் பெரியமனுஷங்களை எங்கே வச்சு அடிப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X