20-ம் தேதி முடிகிறது கெடு : 350 அடுக்கு மாடி வீடுகள் கதி?

Updated : செப் 17, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
20-ம் தேதி, முடிகிறது, கெடு,  350 அடுக்கு மாடி, வீடுகள், கதி?

திருவனந்தபுரம் : கேரள மாநிலம், கொச்சி மாராடு அருகே விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 350 அடுக்கு மாடி வீடுகளை இடிக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, முதல்வர் பினராயி விஜயன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார்.
கேரளாவில், கொச்சி, மாராடு அருகே 4 அப்பார்மென்டுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, கட்டப்பட்டதாக, புகார் எழுந்தது. இது குறித்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 350 இந்த வீடுகளை இடிக்கும்படி, கடந்த மே மாதம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


latest tamil news



இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள், வீடுகளை காலி செய்யும்படி, அவற்றின் உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பினர். ஆனால், அவர்கள், வீடுகளை காலி செய்ய மறுத்து, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, காங். மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டிய கட்டாயம், மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளை இடிப்பதற்கான கெடு வரும் 20-ம் தேதியுடன் முடிவடைவதால் மேல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தேவையான சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பது குறித்து அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தருவது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
24-செப்-201916:00:13 IST Report Abuse
vnatarajan விதிமுறைகளை மீறி காட்டியிருக்கிறது என்றால் 350 வீடுகளையும ஒரே இரவில் காட்டவில்லையே கட்டுவதற்கு குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகியிருக்கவேண்டுமே. இடிப்பதற்கு என்று உடனே வரும் அதிகாரிகள் கட்டுவதை தடுப்பதற்கு அன்றய அதிகாரிகள் எங்கேபோனார்கள். எந்தந்த அதிகாரிகள் பிளானுக்கு அப்ப்ரூவல் கொடுத்தார்களோ அவர்கள்மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். ஆரம்பத்திலேயே கட்ட அப்ப்ரூவல் கொடுக்காமல் இருந்திருந்தால் வீட்டு சொந்தக்காரர்களுக்கு மன உளைச்சலும் பண விரயமும் ஏற்பட்டு இருக்காது இல்லையா. கட்டுவதற்கு உடந்தையாக இருந்த அரசியல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்யச்சொல்லி நீதி மன்றம் உத்தரவுவிட்டுருக்கிறதாஎன்று தெரியவில்லை.
Rate this:
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
21-செப்-201916:21:00 IST Report Abuse
Kunjumani அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சர்ச் தீர்ப்பு மாதிரி இதுவும் கிடப்பில் போடப்படும். இதென்ன சபரிமலையா, இல்லை ஐயப்பனா நாதியில்லாமல் இருக்க.
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
21-செப்-201914:04:46 IST Report Abuse
Jaya Ram பார்த்தீர்களா அது மாநிலம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பினையே வலுவிழக்கச்செய்ய எல்லாக்கட்சிகளும் ஒத்துழைப்பது மக்கள் சட்ட உதவிகள் செய்வது என்று நடக்கிறது, நம்மை சுற்றி உள்ள மாநிலங்கள் எல்லாம் மண்ணின் மைந்தருக்குத்தான் மத்திய , மாநில அரசு வேலைகள் அளிக்கப்படும் மற்றவர்க்கு கிடையாது இங்கோ ஆளுங்கட்சியும் சரி , பிரதான எதிர்க்கட்சியும் சரி மண்ணின் மைந்தருக்கு வேலை என்பதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை அவர்களின் பை நிரம்பினால் போதும் எவன் வேலைப்பார்த்தால் என்ன என்ற நிலைமையே , சிறிய கட்சிகள் அவர்கள் தங்களின் இருப்பை காண்பிப்பதற்காக வலைத்தளங்களிலும் , அல்லது ஒரு பத்து, இருபது பேர் கொண்ட கூட்டமாக சென்று ஒருமணிநேரம் கூக்குரலிட்டு பின் கலைவது அல்லது கைதாகி மாலையில் விடுவதுமாக நடக்கிறது இத்தமிழ் மக்களோ எப்படியோ நமக்கு மூன்று வேலை சோறு கிடைக்கிறது , டாஸ்மாக்கிற்கு பணம் கிடைத்தால் போதும் என்றும் பெண்களோ டீ வி சீரியல் பார்த்தால் போதும் என்ற மனப்பாங்கில் இருக்கிறார்கள் உருப்படாமல் போகும் தமிழ்நாடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X