'ஜாகிர் நாயக் குறித்து மோடி எதுவும் பேசவில்லை'

Added : செப் 17, 2019
Advertisement
 'ஜாகிர் நாயக் குறித்து மோடி எதுவும் பேசவில்லை'

புதுடில்லி 'சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர், ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் படி, பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் எதுவும் பேசவில்லை' என, மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது கூறியுள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நிரந்தர குடியுரிமைமஹாராஷ்டிர மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர், ஜாகிர் நாயக். வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாகவும், பல்வேறு பண மோசடிகள் செய்ததாகவும், இவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.அதைத் தொடர்ந்து, 2016ல், ஆசிய நாடான, முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மலேஷியாவுக்கு அவர் தப்பிச் சென்றார். அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார். அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.சமீபத்தில், ரஷ்யாவில் நடந்த ஒரு மாநாட்டின்போது, மலேஷிய பிரதமர், மகாதிர் முகமதுவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது தொடர்பாக, இரு தலைவர்களும் பேசியதாக, நம் வெளியுறவுத் துறை செயலர், விஜய் கோகலே கூறியிருந்தார்.

இந்த நிலையில், மலேஷிய பிரதமர், மஹாதிர் முகமது, அந்த நாட்டு, 'டிவி' ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:ஜாகிர் நாயக், இந்த நாட்டின் பிரஜை கிடையாது. அவருக்கு முந்தைய அரசு, நிரந்தர குடியுரிமை அளித்துள்ளது. நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளவர்கள், நாட்டின் நிர்வாகம் மற்றும் அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிக்கக் கூடாது. அதை மீறி, சமீபத்தில் இங்குள்ள ஹிந்துக்கள் குறித்தும், சீனர்கள் குறித்தும் கருத்தும் கூறியுள்ளார். பதிலடிஅதனால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அப்போது, ஜாகிர் நாயக்கை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து, மோடி என்னிடம் எதுவும் பேசவில்லை.இவரை, இந்தியாவுக்கு அனுப்பினால், அது பிரச்னையில் தான் முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஜாகிர் நாயக்கை, நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், மலேசிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், ''மோடி, மஹாதிர் முகமது இடை யேயான பேச்சின் போது, ஜாகீர் நாயக்கை நாடு கடத்து வது குறித்து, பேசப்பட்டது,'' என, வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர் பதிலடி தந்திருக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X