பொது செய்தி

இந்தியா

மத மாற்றத்தில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி: உறுதி சான்றிதழ் அளிக்கும்படி மத்திய அரசு உத்தரவு

Updated : செப் 19, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
  மத மாற்றத்தில், ஈடுபடும், தொண்டு, நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி,உறுதி சான்றிதழ் ,அளிக்கும்படி, மத்திய அரசு, உத்தரவு

புதுடில்லி, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, இவற்றில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், தங்கள் மீது, மத மாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் எதுவும் இல்லை என்பதையும், மத மாற்றத்தில் ஈடுபட்டதற்காக தண்டனை எதுவும் பெறவில்லை என்பதையும், உறுதி செய்ய வேண்டும்.

நாடு முழுவதும், ஆயிரக்கணக்கான, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதியை பெற்று, மத மாற்றத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


விதியில் மாற்றம்இது குறித்து, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்துவோர், அவற்றில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர், மத மாற்றத்தில் ஈடுபட்டதாகவோ, அதனால், சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவோ, தங்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அறிவிக்க வேண்டும்.

மேலும், மத மாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான குற்றத்துக்காக, எந்த வழக்கிலும், தண்டனை எதுவும் பெறவில்லை என்றும், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் அரசுக்கு அளிக்க வேண்டும். இதுவரை, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக, தொண்டு நிறுவனங்களின் இயக்குனர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டுமே இது போன்ற சான்றிதழை அளிக்கும்படி, விதிமுறை இருந்தது. அதில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு, தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து உறுப்பினர்களும், இதுபோன்ற சான்றிதழை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தி, மத மாற்றம், தேசதுரோக செயல் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியையும், அவர்கள் அளிக்க வேண்டும்.


பரிசு என்ன?அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவோர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியிருந்தால், அது குறித்து, ஒரு மாதத்துக்குள், மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சிகிச்சைக்கான நிதி எங்கிருந்து கிடைத்தது, எவ்வளவு செலவாகும், அந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்ற விபரத்தையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த விதிமுறை, ஏற்கனவே அமலில் இருந்தாலும், அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய கால வரையறை, இரண்டு மாதமாக இருந்தது; அது, ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உதவி தொடர்பான சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தனி நபர், வெளிநாடுகளில், தங்களுக்கு கிடைத்த, 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிசுகளை பற்றி, அரசுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே இருந்த சட்டப்படி, 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பரிசுகள் பற்றிய விபரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
21-செப்-201917:54:46 IST Report Abuse
Subramaniam இந்துக்களின் மத வழிபாடு முறைகள் மரபுகள் பண்பாடுகள் காப்பி அடித்து எல்லாம் எம்மிடமும் இருக்கிறது என்று அப்பாவிகளை மதம் மாற்றும் பாவாடைகளுக்கு ஒரு தண்டனை சட்டம் தேவை
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
20-செப்-201900:21:41 IST Report Abuse
Rajesh சில இடங்களில் அவன் உள்ளேயே செல்ல முடியாது கோவிலுக்குள் போனால் அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்க்கும் இந்த கூட்டம். பொது இடத்திற்கு போனால் அவனை ஒரு புழுவை பார்ப்பது போல் பார்க்கும் இந்த கூட்டம். முதலில் நாம் அதனை சரி செய்தால் அவனே மதமாற்றம் செய்ய வரும் தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு செருப்படி கொடுப்பான். முதலில் நாம் அனைவரையும் மனிதனாக ஏற்றுக்கொண்டு மரியாதையாக நடத்துவோம். அது நடக்காத வரை இதையும் யாராலும் தடுக்க முடியாது.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
19-செப்-201915:20:28 IST Report Abuse
Chowkidar NandaIndia சபாஷ். அமித் ஷாவின் அடுத்த அதிரடி. சரவெடிகளை ஒவ்வொன்றாக கொளுத்தி போட்டுக்கொண்டிருக்கிறார் எங்கள் அமித். நாடு நலம்பெற இதுபோல் இன்னும் நிறைய உங்களிடம் எதிர்பார்க்கிறோம் ஐயா. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X