பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் நதிகளை மீட்போம் நிறைவு விழா

Added : செப் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 கோவையில், நதிகளை, மீட்போம்,  நிறைவு, விழா

கோவை :தமிழ்நாடு முழுவதும் நிதிகளை இணைக்க வலியுறுத்தி நிதிகளை மீட்போம் பாரதம் காப்போம் என்னும் பெயரில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவு விழா கோவையில் நடைபெற்றது.

காவேரி கூக்குரல் இயக்கத்தில் அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான 3,500 கி.மீ மோட்டர் சைக்கிள் பயணத்தை கொட்டு மழையுடன் தலகாவேரியில் சத்குரு(செப்.3-ல்) தொடங்கினார்.
தலகாவேரியில் இருந்து மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் குழுவினருடன் புறப்பட்ட சத்குரு மைசூரு, மடிகேரி, ஹுன்சூர், மைசூரு, மண்டியா, பெருங்களூரு, ஓசூர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி வழியாக செப்.15-ம் தேதி சென்னைக்கு சென்றார்.
தலகாவேரியில் இருந்து புறப்படும் போது சத்குரு கூறியதாவது:காவேரியின் ஊற்றிடமான தலைகாவேரியில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறோம். பருவமழை பேரற்புதமாய் கொட்டி தீர்க்கிறது. எலும்புகளும் நனைந்திட பயணித்துக் கொண்டிருக்கிறோம். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சவால் மிகுந்த இந்த பயணத்தில் என்னுடன் பயணிக்க பலரும் உறுதியுடன் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த மழையை மண்ணுக்குள் அனுப்ப மரங்கள் அவசியம். இவ்வாறு சத்குரு கூறினார்.
இந்நிலையில் கோவையில் நிறைவு விழா நடைபெற்றது . விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் லட்சுமி நாராயணசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, பாரதிய வித்யாபவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர்,ராமசாமி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
18-செப்-201902:17:47 IST Report Abuse
Raj அரசியல் சாமியார் கூக்குரல் நிறைவு பெற்றது.
Rate this:
Share this comment
Cancel
Pachiappan - bengaluru,இந்தியா
18-செப்-201900:11:15 IST Report Abuse
Pachiappan தயவுசெய்து தவறான கருத்து வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்த வேண்டாமே. சத்குரு நதிகளை இணைப்பதற்கு ஆதரவானவர் அல்ல. ஈஷா மூலமாக நதிகளை மீட்போம் என அவற்றை புத்துயிரூட்டி மீண்டும் சிறப்பாக ஓடச்செய்யும் வரும் சந்ததியினருக்கான அற்புதமான திட்டம் கையிலெடுத்து செயலாற்றி வருகிறார்கள். எனவே, இச் செய்தியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள "நதிகளை இணைப்பது" என்பது தவறானது. நன்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X