விருதுக்கு தகுதியானவர் மோடி:பில்கேட்ஸ் அறக்கட்டளை உறுதி

Updated : செப் 18, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (11)
Advertisement
விருதுக்கு, தகுதியானவர்,மோடி,பில்கேட்ஸ்,அறக்கட்டளை,உறுதி

நியூயார்க், துாய்மை இந்தியா திட்டத்தை இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக அமையும் என பில் கேட்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மோடிக்கு விருது வழங்க கூடாது என எழுந்த எதிர்ப்புக்கு பதிலடி தரப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2014ல் பிரதமராக பதவியேற்றார். அந்த ஆண்டு அக்டோபர் 2ல் மஹாத்மா காந்தி பிறந்த நாளில் 'ஸ்வச் பாரத்' எனப்படும் 'துாய்மை இந்தியா' திட்டத்தை துவக்கி வைத்தார்.இந்த திட்டத்தின் படி பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அடுத்த5 ஆண்டுகளில் ஆறு கோடி கழிப்பறைகளை கட்டித் தர முடிவு செய்யப்பட்டது.பொது இடங்களை துாய்மை படுத்துவதற்கும் இந்த திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019 அக்டோபர் 2ம் தேதிக்குள் இலக்கை எட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் துாய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர்களில் ஒருவரும் பிரபல தொழில் அதிபருமான பில்கேட்ஸ் நடத்தி வரும் பில் - மெலிண்டா அறக்கட்டளையின் சார்பில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டது.அமெரிக்காவில் அடுத்த வாரம் நடக்கும் நிகழ்ச்சியில் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர் மீதான மனித உரிமை அறிக்கைகள் திருப்திகரமாக இல்லாததால் இந்த விருது அவருக்கு வழங்க கூடாது என சில தெற்காசிய அமெரிக்கர்கள் பில் கேட்ஸ் அறக்கட்டளைக்கு பகிரங்க கடிதம் எழுதினர்.இதற்கு பில் கேட்ஸ் அறக்கட்டளை அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன் இந்தியாவில் 50 கோடி மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு இன்று கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும். எனவே எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
19-செப்-201906:37:31 IST Report Abuse
kalyanasundaram ALL GIFTS HE RECEIVES ARE BEING AUCTIONED AND THE RECEIVED AMOUNT IS DEDICATED TO THE COUNTRY
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
18-செப்-201911:57:09 IST Report Abuse
KMP still many people in India dont have houses, electricity, quality food and hygienic environment especially in villages. These circumstances continue as worst in north Indian states especially Bihar and UP...How our PM can be deserved for such prominent award from Microsoft...
Rate this:
Share this comment
sankar - ghala,ஓமன்
18-செப்-201916:43:47 IST Report Abuse
sankarYes , that was the circumstances when congress was in rule , and now there is a significant changes which took place in India and it is very much visible from inside & outside prospective, so kindly remove your hatred glass & feel the difference....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-செப்-201911:12:28 IST Report Abuse
Nallavan Nallavan அரசு அலுவலகங்களில் தொடர்ந்து மைக்ரோசாப்ட் உபயோகத்தில் இருக்கவேண்டுமே ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X