படேலின் தொலைநோக்கு பார்வையால் பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு

Updated : செப் 19, 2019 | Added : செப் 17, 2019 | கருத்துகள் (12+ 141)
Advertisement

கேவாடியா:''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் சரியான முடிவு எடுப்பதற்கு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த, சர்தார் வல்லபபாய் படேலின் தொலைநோக்கு பார்வையே உதவியது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.குஜராத் மாநிலத்தில், நர்மதை நதியில் அமைக்கப்பட்டுள்ள, சர்தார் சரோவர் அணை, முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியது. அதையொட்டி நேற்று நடந்த பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.


PM Modi meets his mother

PM Modi meets his mother


இணைந்தது ஐதராபாத்மேலும், அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிகப் பெரிய சிலையான, சர்தார் வல்லபபாய் படேலின் சிலையையும் அவர் பார்வையிட்டார்.அங்கு நடந்த நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, சர்தார் வல்லபபாய் படேலின் தொலைநோக்கு பார்வையே, எங்களுக்கு, தூண்டுதலாக அமைந்திருந்தது.


Prime Minister Narendra Modi''s birthday

Prime Minister Narendra Modi''s birthday

நாடு சுதந்திரம் அடைந்தபோது, பல சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. அப்போது, ஐதராபாத் சமஸ்தானம், இணைய மறுத்தது. ஐதராபாத் நிஜாமுடன், படேல் பேச்சு நடத்தினார். ஆனால், ஐதராபாதை தனி நாடாக, நிஜாம் அறிவித்தார். கடந்த, 1948ல், படேல் அதிரடியான நடவடிக்கை எடுத்தார். ராணுவ நடவடிக்கை மூலம், ஐதராபாத், நம் நாட்டுடன் இணைக்கப் பட்டது.அவருடைய அந்த தொலைநோக்கு பார்வையே, தற்போது எங்களுக்கு துாண்டுதலாக இருந்தது. ஜம்மு - காஷ்மீர் தற்போது நாட்டுடன் முழுமையாக இணைந்துள்ளது.


PM Narendra Modi''s birthday

PM Narendra Modi''s birthday

அமெரிக்காவில் உள்ள, 133 ஆண்டுகள் பழைமையான, சுதந்திர தேவி சிலையை, நாள்தோறும், 10 ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர். ஆனால், திறந்து வைக்கப்பட்டு, 11 மாதங்களேயான, படேல் சிலையை, நாள்தோறும், 8,500 பேர் பார்வையிடுகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், சுற்றுலா வளர்ச்சி அடையும். சர்தார் சரோவர் அணை, குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் என, நான்கு மாநில மக்களுக்கு உதவுகிறது. இந்த அணை அமைப்பதற்கு உதவிய லட்சக்கணக்கானோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த, 2017ல் தான், 455 அடி உயரத்துக்கு தண்ணீரை தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது முதல் முறையாக, முழு கொள்ளளவை எட்டியுள்ளது.


PM Modi meets his mother

PM Modi meets his mother


'இயற்கை, நம் கொடை!'வளர்ச்சி திட்டங்களுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதுதான் நம் கலாசாரம். இயற்கை நமக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய கொடை. அதை பராமரிப்பது நம் கடமை.இவ்வாறு, அவர் பேசினார். படேல் சிலை அமைந்துள்ள கேவாடியாவில், வண்ணத்துப்பூச்சி பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்டவற்றையும், மோடி திறந்து வைத்து, நுாற்றுக்கணக்கான வண்ணத்து பூச்சிகளை பறக்க விட்டார். ஹெலிகாப்டரில் இருந்து, படேல் சிலை குறித்து தான் எடுத்த, 'வீடியோ'வை, சமூக வலைதளத்தில், மோடி வெளியிட்டார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த குஜராத் முதல்வர், விஜய் ரூபானி உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.தாயிடம் ஆசிசர்தார் சரோவர் அணை நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட, பிரதமர் நரேந்திர மோடி, காந்திநகரில் உள்ள தன் தாயின் வீட்டுக்குச் சென்றார். தன், 69வது பிறந்தநாளையொட்டி, தாய் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார். பின்னர், தாயுடன் மதிய உணவு எடுத்துக் கொண்டார்.

மோடியின் பிறந்தநாளையொட்டி, காங்., தலைவர், சோனியா, முன்னாள் தலைவர், ராகுல், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலரும், அவருக்கு, சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.


புதிய திரைப்படம்மோடியின் இளமை பருவம் தொடர்பாக, புதிய ஹிந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான முன்னோட்ட புகைப்படம், நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர், சஞ்சய் லீலா பன்சாலி, மஹாவீர் ஜெயின் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். மன் பைராகி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, சஞ்சய் திரிபாதி எழுதி, இயக்குகிறார். படத்தின் முதல் புகைப்படத்தை, பிரபல பாலிவுட் நடிகர், அக் ஷய் குமார் நேற்று வெளியிட்டார். இந்தாண்டு இறுதியில், இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.

இதற்கிடையே, நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான, புகைப்படத் தொகுப்பு அடங்கிய புத்தகம், நேற்று வெளியிடப்பட்டது. குஜராத்தின் வாத்நகரில் சிறுவனாக இருந்ததில் இருந்து, பிரதமரானது வரையிலான, அவருடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளின் புகைப் படங்கள், இதில் இடம் பெற்றுள்ளன. அவருடைய குடும்பத்தார், நண்பர்கள், தேசிய மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களின் கருத்துகளும், இதில் இடம் பெற்றுள்ளன. டில்லியைச் சேர்ந்த, 'ஓம் புக்ஸ்' நிறுவனம் வெளியிட்ட இந்த புத்தகத்தை, ராகுல் அகர்வால், பாரதி பிரதாப் தொகுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (12+ 141)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
18-செப்-201913:44:34 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் மோடி அவர்கள் நல்ல உடல் நலத்த்தோடு நீடுடி வாழ்ந்து இந்தியாவை முன்னேற்ற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
18-செப்-201912:58:45 IST Report Abuse
ஆப்பு பட்டேல் காங்கிரஸ் ஆள்...ஆனா அவுரு மட்டும் நல்லவர்.
Rate this:
Share this comment
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
18-செப்-201922:27:47 IST Report Abuse
ஆ.தவமணி,   அன்றைய காங்கிரஸ் கட்சியில் திறமையாளர்களும், நேர்மையாளர்களும் எண்ணற்றோர் இருந்தனர்.... உதாரணத்திற்கு, தன் மாமனார் நேருவின் அரசாங்கத்தில் நடந்த ..டிசம்பர் 1955 மற்றும் 1958 இல் ஒரு குறிப்பிட்ட நீறுவனத்திற்காக ராம் கிருஷ்ணன் டால்மியா எல்.ஐ.சி. யில் செய்த ஊழலை கண்டுபிடித்து அதற்கு துணை என்று கருதப்பட்ட அன்றைய நிதி அமைச்சர் T.T. கிருஷ்ணமாச்சாரி பதவி விலகுவதற்கும் முழுக்காரணமாக இருந்தவர். சிறந்த நேர்மையாளர். தன் நேர்மையின் காரணமாகவே நேரு மற்றும் இந்திராவின் வெறுப்பை சம்பாதித்தவர்... ஆனால் இன்றுள்ளதோ? காங்கிரஸ் அல்ல.. இது இந்திரா காங்கிரஸ்.. காங்கிரஸ் இரண்டாக உடைந்த பின்னர் நேர்மையாளர்களான காமராஜர், மொரார்ஜி தேசாயி, நிஜலிங்கப்பா போன்ற உண்மையான தன்னலமற்ற தலைவர்களையும், தமிழகத்தில் குமரி அனந்தன், சிவாஜி போன்ற முதல்நிலைத்தொண்டர்களையும் கொண்டு இயங்கியதுதான் உண்மையான காங்கிரஸ்.. இந்திராவின் தலைமையில், இன்றைய ப.சி. உள்ளிட்ட மலை முழுங்கி மகாதேவன்களை கொண்டு இயங்கி, தி.மு.க. உடன் கூட்டு சேர்ந்து காமராஜரை தோற்கடித்து, தி.மு.க. விடம் தமிழக ஆட்சியை 1971 ல் ஒப்படைத்த இந்திரா காந்தியின் கட்சி.. காங்கிரஸா? .. ஆப்பு என்ற பெயரில் மண்ண்டையில் மண்ணாங்கட்டி தான் உள்ளதோ?...
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201908:59:55 IST Report Abuse
Janarthanan மேலே உள்ள படத்தில் சோபா,டைனிங் டேபிளை பார்த்தால் ரொம்ப சாதாரணமானவை, எளிமையும் நேர்மையையும் ஊட்டி வளர்த்து உள்ளார்கள் அந்த தாய். கொள்ளு பேரன் பேத்தி வரைக்கும் சொத்து சேர்த்து உள்ள, மற்றும் குடும்ப பணக்காரர்கள் ஆக இருந்தும் நாட்டை கொள்ளை அடித்தவர்கள் போல இல்லாமல் இப்படி ஒரு தலைவர் கிடைத்தத்திற்கு நன்றி தெரிவித்து கொள்ளுவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X