சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தால் குண்டர் சட்டம்

Added : செப் 17, 2019 | கருத்துகள் (5)
Advertisement

திருநெல்வேலி:திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் கோரிக்கைகளுக்காக கலெக்டரிடம் மனுக்கள் கொடுக்கின்றனர். ஆனால் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. மனு மீது நடவடிக்கை, கலெக்டர் மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கி்ன்றனர். கடந்த 2017 அக்.,23ல் கந்துவட்டி பிரச்னையில், காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, மனைவி, இரண்டு பெண்குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தனர்.
இச்சம்பவத்திற்கு பின் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தல் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், விவசாயி போதர் என்பவர், தமது நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக கூறி நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சித்தார். கடந்த வாரம், அரசு வேலைவாங்கி தருவதாக ஏமாற்றியவர் மீது நடவடிக்கை கோரி, சண்முகசுந்தரம் என்பவர் தீக்குளிக்க முயற்சித்தார். தற்போது இருவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் கோரி்க்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஏமாற்றியவர் மீது வழக்குபதிவு செய்யப்படவில்லை, இந்நிலையில்இதுகுறித்து நேற்று கூறிய கலெக்டர் ஷில்பா, கலெக்டர் அலுவலகத்தில் இனி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudhapriyan - Chennai,இந்தியா
18-செப்-201910:44:22 IST Report Abuse
sudhapriyan என்ன மடத்தனமான நடவடிக்கை ... தீக்குளிப்பவர் தீவிரவாதியோ, இல்ல பணக்காரனோ இல்லை .. தன்னால் முடியாமல் உங்களிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காத போது கடைசி முயற்சியாக செய்வது ...
Rate this:
Share this comment
Cancel
Adhithyan - chennai,இந்தியா
18-செப்-201909:47:06 IST Report Abuse
Adhithyan கந்துவட்டிகாரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாட்டாங்களா ???
Rate this:
Share this comment
Cancel
18-செப்-201906:42:03 IST Report Abuse
Chandran ladies decision.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X