எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வீட்டுமனை விற்பனை மோசடிக்கு, 'செக்' ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
விதிமுறைகளை மீறிய மனைகள், மோசடியாக விற்கப்படுவதை தடுக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அப்பாவி மக்கள் ஏமாற்றப் படுவது தடுக்கப்படும்.தமிழகத்தில், எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5,381 சதுர அடி; அதற்கு மேலான
வீட்டுமனை,விற்பனை,மோசடிக்கு, 'செக்' , ரியல் எஸ்டேட் ஆணையம்,அதிரடி

விதிமுறைகளை மீறிய மனைகள், மோசடியாக விற்கப்படுவதை தடுக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய நிபந்தனை விதித்துள்ளது. இதனால், அப்பாவி மக்கள் ஏமாற்றப் படுவது தடுக்கப்படும்.

தமிழகத்தில், எட்டு வீடுகளுக்கு மேல் கட்டப்படும் குடியிருப்பு திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, 5,381 சதுர அடி; அதற்கு மேலான நிலத்தை, வீட்டு மனைகளாக மேம்படுத்தவும், ஆணையத்தில் பதிவு செய்வதுகட்டாயமாகி உள்ளது.

புதிய மனை பிரிவுகளுக்கு அனுமதி அளிப்பதிலும், மனைகளை பிரிப்பதிலும், இந்த விதியை அமல்படுத்துமாறு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி.,க்கு, ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான உத்தரவு கடிதங்களை, சி.எம்.டி.ஏ.,வும், டி.டி.சி.பி.,யும், உள்ளாட்சிகளுக்கு அனுப்பி வருகின்றன.

இதையடுத்து, புதிய மனைப்பிரிவுக்கு அனுமதி தரும்போது, ஆணையத்தில் பதிவு செய்வதும், ஒரு நிபந்தனையாக சேர்க்கப்பட்டு உள்ளது.இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாமல், மனை களை விற்க முடியாது. அப்படி யாராவது விற்பனை செய்தால், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகளும், ரியல் எஸ்டேட் ஆணையமும்நடவடிக்கை எடுக்கும்.

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:மனை விற்பனையை முறைப்படுத்துவது என்ற அடிப்படையில், ரியல் எஸ்டேட் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கை, அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுவதை தடுப்பதாக அமையும். அதே நேரம், ஆணையத்தின் விதிமுறைகளை அமல்படுத்துவதில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கும் உத்தரவுகளில், ரியல் எஸ்டேட் ஆணைய பதிவு நிபந்தனை சேர்க்கப்படுகிறது. ஆனால், உள்ளாட்சிகள் வழங்கும் உத்தரவுகளில், இந்த நிபந்தனைகள் சேர்க்கப்படுவதில்லை.இத்தகைய உள்ளாட்சி அமைப்புகள் மீது, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., - ரியல் எஸ்டேட் ஆணையம் ஆகியவை நடவடிக்கை எடுக்க உள்ளன. ஊரக பகுதிகளில், சிறிய அளவிலான மனைப்பிரிவுகள் தான், அதிகம் உருவாக்கப்படுகின்றன.

உரிய விதிகளை பின்பற்றாமல், அங்கீகாரம் அளிக்கப்பட்ட வரைபடத்தில் இருப்பதைவிட, கூடுதல் உட்பிரிவுகள் செய்து, மனைகளை விற்பவர்கள் தண்டிக்கப்படுவர். உள்ளாட்சி அமைப்புகள் துணையுடன், மனை விற்பனையில் நடக்கும் மோசடி முடிவுக்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bangaruswamy ("SWAMY") - Mount Druitt, NSW,ஆஸ்திரேலியா
18-செப்-201909:37:08 IST Report Abuse
Bangaruswamy ( சில நாட்களுக்கு முன் இந்த பகுதியில் பாலவாக்கம் சர்வே நம்பர் 62 பற்றிய செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. உண்மை. பல ஆண்டுகளாக பல வீட்டு மனைகள் பட்டா மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் உள்ளன. பக்கிங்காம் கால்வாய் நீர் வழிப்பாதை அமைக்க அரசு திட்டங்கள் வகுத்துள்ளன. அதை காரணம் காட்டி இந்த சர்வே நம்பர் கொண்ட வீட்டு மனைகளை முடக்கிப் போடவேண்டிய அவசியமில்லை. பொருளாதாரம் மேம்பட ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய பங்கு அளிக்கவல்லது. ஆதலால் விரைவில் cmda மற்றும் சம்பந்தப்பட்ட தமிழ் நாடு அரசு நிறுவனங்கள் பாலவாக்கம் சர்வே நம்பர் 62 வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்தி பட்ட மற்றும் பத்திரப்பதிவு செய்ய ஆணை வசங்கவேண்டும். பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
18-செப்-201901:05:20 IST Report Abuse
Nagarajan Duraisamy தண்ணியிலே எழுதி வெச்சுக்கலாம்.. பஞ்சாயத்து approval என்று ஒரு முறையை வைத்து ஊர் பூரா விற்று தீர்த்த உத்தமர்கள் உள்ள நாட்டில் RERA நிலை பெற பல தடைகள் உள்ளன. எந்த இடத்திலும் 20 அடிக்கு மேல் வழிப்பாதை கூட விடுவதில்லை.. எல்லா புதிய மனை போடப்பட்ட இடங்களும் மிக மோசமான ஒரு வண்டி மட்டுமே செல்லும் நிலையில் உள்ளன. மும்பையில் உள்ள தாராவி போல தான் செய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X