'மாஜி' கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (7)
Advertisement
'மாஜி கமிஷனர்  விரைவில் கைது

கோல்கட்டா, : சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல்செய்துள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, சாரதா சிட்பண்ட் நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று திருப்பி தராமல், 2,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.





இந்த வழக்குகளை, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனரான, ராஜிவ் குமார் விசாரித்து வந்தார். பின், இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. ஆனால், பல முக்கிய ஆவணங்களைதராமல் மறைத்து விட்டதாக, ராஜிவ் குமார் மீது, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டியது.தற்போது, மேற்கு வங்க மாநிலம், சி.ஐ.டி., பிரிவின் கூடுதல், டி.ஜி.பி.,யாக, ராஜிவ் குமார் உள்ளார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி, அவருக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பிஉள்ளது.
இந்த நிலையில், முன்ஜாமின் கேட்டு, ராஜிவ் குமார் சார்பில், பராசத் மாவட்டத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று காலை, மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுடைய எல்லைக்குள் இல்லை என, சிறப்பு நீதிமன்றம், அதை நிராகரித்தது. அதைஅடுத்து, பராசத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில், ராஜிவ் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். இங்கேயும் அவரது முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

விரைவில் கைது?சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரை கைது செய்வதற்கு, கோல்கட்டா உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. சமீபத்தில் இந்த தடை நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ராஜிவ் குமாருக்கு, சி.பி.ஐ., தரப்பிலிருந்து, 'சம்மன்' அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.நேற்று காலை, 10:00 மணிக்கு ஆஜராகும்படி, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201912:01:37 IST Report Abuse
Thiagu மம்தாவை கைது செய்தால்,சூசை தலைமையில் மிக பெரும் போராட்டம் தமிழ் நாட்டில் நடத்த படும்
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
18-செப்-201919:25:13 IST Report Abuse
THENNAVANஐயோ அப்புறம் என்னவாகும் இந்த நாடு ,நல்லா இருக்கும் போதுமா...
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
18-செப்-201911:50:24 IST Report Abuse
S.P. Barucha அதிகாரிகள் நேர்மையாக மக்களுக்கு பணியாற்ற வேண்டும். கைது என்ன காவல் அதிகாரி பார்க்காததா ?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
18-செப்-201911:42:11 IST Report Abuse
Cheran Perumal மாட்டிக்கொண்டு உண்மைகளை சொல்லிவிட்டால் மம்தாவிடமிருந்து ஆபத்து இருக்கிறது இவருக்கு என்று விவமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X