பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் குப்பை இனி 'ஷாக்' அடிக்கும் : மின் உற்பத்திக்கு கைகொடுத்த அமெரிக்க தமிழர்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
திண்டுக்கல், குப்பை, ஷாக் அடிக்கும்,  மின் உற்பத்தி,  அமெரிக்க தமிழர்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து 'புளூம் பாக்ஸ்' தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை செயல்படுத்தப்பட உள்ளது.

திண்டுக்கல் நகரில் தினமும் 15 டன் குப்பை சேகரிக்கப்பட்டு முருகபவனம் பகுதியில் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பையை மறுசுழற்சி செய்யும் திட்டத்தின் கீழ் இரு ஆண்டுகளுக்கு முன் ரூ.90 லட்சத்தில் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.

வீணாகும் காய்கறிகள், ஓட்டல் உணவுக் கழிவுகளை நொதிக்க செய்து மீத்தேன் வாயு தயாரிக்கப்படுகிறது. இந்த வாயுவை மின்சாரமாக மாற்றுவதற்கான பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. 'திண்டி மா வனம்' அமைப்பின் சார்பில் தினமும் 4.5 டன் காய்கறி, ஓட்டல் கழிவுகளை நொதிக்க செய்து மீத்தேன் தயாரிக்கப்படுகிறது. மின்சாரம் தயாரிக்கப்படாததால் மீத்தேன் வீணாகிறது. ஆனால் மக்கும் குப்பை அப்புறப்படுத்தப்படுகிறது.


மாசில்லா மின்சாரம்இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 'புளூம் எனர்ஜி' என்ற மாசில்லா மின் உற்பத்தி நிறுவனத்தின் 'புளூம் பாக்ஸ்' தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கையை 'திண்டி மா வனம்' அமைப்பினர் எடுத்தனர். கடந்த ஆண்டு அந்நிறுவனத்தினர் திண்டுக்கலில் ஆய்வு நடத்தினர்.சமீபத்தில் அமெரிக்கா சென்ற முதல்வர் பழனிசாமி 'புளூம் எனர்ஜி' நிறுவனத்தில் மின்சாரம் தயாரிப்பை பார்வையிட்டார். இம்முறையை திண்டுக்கல்லில் விரைவில் செயல்படுத்தவும் அந்நிறுவனத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

'திண்டி மா வனம்' உறுப்பினர் முருகேசன் கூறியதாவது:

திண்டுக்கல்லில் 'புளூம் பாக்ஸ்' மூலம் மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. 'புளூம் எனர்ஜி' நிறுவன அதிகாரிகளும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த ஆவலோடு இருக்கின்றனர். திருச்சியை சேர்ந்த அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீதர், திண்டுக்கல்லில் இத்திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறினார். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும், என்றார்.


'புளூம் பாக்ஸ்' மின்சாரம்இது சுற்றுச்சூழலை பாதிக்காத மின் உற்பத்தி தொழில்நுட்பம். இதில் 10 முதல் 12 அடி உயர இரும்பு பெட்டிகள் இருக்கும். இதனுள் ஆக்சிஜன், இயற்கையாக தயாரிக்கப்பட்ட வாயுவை உட்செலுத்தும் போது மின்சாரம் உற்பத்தியாகும். வெட்ட வெளியிலும் வைத்து பெட்டிகளை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் கையடக்க 'புளூம் பாக்ஸ்'கள் வர உள்ளன. ஒரு சிறிய 'புளூம் பாக்ஸ்' மூலம் 2 வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் பெற முடியும். இத்தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் 'கூகுள், அமேசான்' நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
21-செப்-201922:47:05 IST Report Abuse
Raj Raj CJB ஒரு WATT மின்சாரம் தயாரிக்க 500 ரூபாய் ஆகும் என்பது தவறு என்பது என் கருத்து .நீங்கள் இதனைப்பற்றி தெளிவாக தெரிந்திருக்க வில்லை.(It is working in the principle of fuel cells Technology whatever you are given the statistics are wrong before giving any such comments pl. study)
Rate this:
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
22-செப்-201901:29:34 IST Report Abuse
Nagarajan Duraisamyநான் படித்ததை தான் எழுதி இருக்கிறேன், தவறென்றால் திருத்தி சரியான விலையை எழுதவும். உங்கள் கூற்றுப்படி 100 ரூபாய் செலவில் 300 ரூபாய்க்கு மின்சாரம் தயாரிக்கலாம் என்பது எப்படி? கொஞ்சம் விளக்கவும். ப்ளூம் box விலை என்ன ? 1 WATT மின்சாரம் தயாரிக்க என்ன செலவு ? ஒரு box மூலம் எவ்வளவு மின்சாரம் தயாரிக்க முடியும் ? ஒரு box வாங்கினால் வாங்கும் செலவை சரிக்கட்ட(R .O .I) 8 வருடங்களாகும். இந்த box ஆயுட்காலம் 10 வருடம் தான். விக்கிபீடியா இணையத்தளத்திலிருந்து "Scandia is scandium oxide (Sc2O3) which is a transition metal oxide that costs between US$1,400 and US$2,000 per kilogram in 99.9% pure form. Current annual worldwide production of scandium is less than 2,000 kilograms " இவ்வளவு விலை மதிப்புள்ள மூல பொருள் தேவைப்படுகிறது...இதனால் தான் மின்சாரம் தயாரிக்கும் செலவு அதிகம்....
Rate this:
Cancel
Raj - Trichy,இந்தியா
21-செப்-201922:33:21 IST Report Abuse
Raj எல்லோருக்கும் தெரியும்படியாக என்னுடைய கணக்குப்படி 100 ருபாய் சிலவில் 300 ருபாய்க்கு பவர் உண்டாக்கலாம் அதுதான் பூளும் பாக்ஸ்.இதற்க்கு எதாவது ஒரு ஹைட்ரோ கார்பன் உள்ள கேஸ்சும் தண்ணீரும் தேவை .நல்ல ஒரு கண்டுபிடிப்பு,இது ஒரு பொக்கிஷமான டெக்னாலஜி, இது இந்தியாவுக்கு மிகவும் தேவை இதனை அமைக்க ஏற்பட்டு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-செப்-201905:28:58 IST Report Abuse
J.V. Iyer நல்ல காரியம். வரவேற்கப்படவேண்டிய விஷயம். முதலில் திண்டுக்கல்லில் இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X