யசோதா பென்னை சந்தித்தார் மம்தா: இன்று மோடியுடன் சந்திப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement
யசோதா பென்னை சந்தித்தார் மம்தா: இன்று மோடியுடன்  சந்திப்பு

கோல்கட்டா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், பா.ஜ.,வுக்கு எதிராகவும், மம்தா பானர்ஜி உட்பட, அக்கட்சியினர் கடுமையான விமர்சனம் செய்து வந்தனர்.இந்தாண்டு நடந்த, லோக்சபா தேர்தலின்போது, இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியை, மம்தா பானர்ஜி, டில்லியில் இன்று மாலை சந்தித்து பேச உள்ளார்.




பா.ஜ., தேசிய பொதுச் செயலர், கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக, கோல்கட்டா முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரிடம், சி.பி.ஐ., விசாரிக்க உள்ளது. இதற்காக, 'சம்மன்' அனுப்பியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டால், மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் பாதி பேர் மற்றும் கட்சியின் பல மூத்த தலைவர்கள், சிறைக்கு செல்வர்.அதனால், ராஜிவ் குமாரை காப்பாற்றுவதற்காக, தன் கடைசி முயற்சியாக, பிரதமரை சந்திக்கிறார் மம்தா. ஆனால், இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.


' யசோதா பென்னுடன் சந்திப்பு'


டில்லிக்கு புறப்படும் முன், கோல்கட்டா சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் வந்த மம்தா பானர்ஜி , மோடியின் மனைவி யசோதா பென்னை சந்தித்தார். இருவரும் சில நிமிடம்சந்தித்து நலம் விசாரித்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் செல்வதற்காக வந்ததாக ,மம்தா பானர்ஜியிடம் யசோதா பென் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
19-செப்-201914:13:20 IST Report Abuse
Rajavelu E. யசோதா பென்?
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
18-செப்-201917:23:25 IST Report Abuse
Ramalingam Krishnaswamy 'நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிடச் செய்துவிடும்' -செய்யும் தர்மம், தர்மவான்களை வசைபாடுபவர்களையும் அவர்களாவே வந்து வணங்கச் செய்யும் என்பதற்கு இதைவிட நேர்முக சாட்சியம் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
18-செப்-201915:26:18 IST Report Abuse
ganapati sb மம்தா அரசியலில் தன்னை எதிர்த்தாலும் எப்போதும் தன் பிறந்தநாளுக்கு வங்கத்து இனிப்புகள் அனுப்புவார் என மோடி ஒருமுறை கூறினார் இம்முறை நேரிலேயே இனிப்பு வழங்க செல்கிறாரோ என்னவோ நல்லதையே நினைப்போம் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக எதிர்த்ததால் வங்கத்தில் வாரிசு ஊழல் கான் கிராஸும் தேச விரோத கம்யூனிஸ்டும் காணாமல் போன நன்மை நடந்துள்ளதே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X