பொது செய்தி

தமிழ்நாடு

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்?

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

ஈரோடு : ''ஐந்து மற்றும், எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது பொது விதி. இதற்கு, தமிழகத்தில், மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.



latest tamil news



ஈ.வெ.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில், ஈ.வெ.ராமசாமி நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், அவர் கூறியதாவது:காலாண்டு தேர்வுக்குப்பின், பள்ளி விடுமுறை இல்லை எனக்கூறி வருகின்றனர். அவ்வாறு ஏதும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல காலாண்டு விடுமுறை உண்டு. இதுபோன்ற பல வதந்திகளை, பரப்பி வருவதால் குழப்பம் ஏற்படுகிறது.


latest tamil news



அதேநேரம், காந்தியடிகளின் பிறந்தநாளை, பள்ளி கல்வித்துறை வாயிலாக சிறப்பாக கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது. இவ்விழாவுக்காகவும், காலாண்டு அட்டைவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது பொது விதி. இது, தேசிய அளவில் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் இதற்கு, மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்த கால கட்டத்தில், மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலை தொடரும்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவு, முதல்வரால் எடுக்கப்படும். இதுபற்றி கூற இயலாது. இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.


latest tamil news



'தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான்' ஈரோடு மாவட்டம், கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில், குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, அலுவலகத்தை, திறந்து வைத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுபவர்களுக்கு, ஆன்லைனில் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது. கவுன்சிலிங் முறையில் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-செப்-201901:38:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni மண்ணாங்கட்டி போங்கய்யா போங்க நீங்களும் உங்கள் கொள்கைகளும் தேர்வுகளும் படிக்காத படிப்பே ஏறாத பெரியாரின் நியாபகமா உறுப்பட்டாப்லதான் அடுத்த புரட்ச்சி ப்ரீ கே ஜி lkg அண்ட் ukg படிக்கும் பிள்ளைகளை பொது தேர்வு என்று விதைக்கவும் ஆனால் எல்லாருக்கும் பொது அறிவு சூன்னியம் தமிழ் தெரியாது ஹிந்தி படிக்கவேகூடாது ஆங்கிலம் அம்போன்னு போவணும் இதர பாடங்களிலெல்லாம் அவந்தரை
Rate this:
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
18-செப்-201911:15:36 IST Report Abuse
Pillai Rm nandru
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
18-செப்-201908:56:09 IST Report Abuse
chander பொதுத்தேர்வில் தோற்று போகிறவர்கள் கதி அதோ கதிதான் அரசியல் வாதிகளுக்கு முதலில் தகுதி தேர்வு வைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X