டிரம்பின் சிறந்த நண்பர் மோடி பாக்., முன்னாள் தூதர் அறிவிப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement

வாஷிங்டன் : ''அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கவுள்ளதை அடுத்து, தன் சிறந்த நண்பர் மோடி தான், என்பதை, அவர் உறுதி செய்துள்ளார்,'' என, பாக்., முன்னாள் துாதர், ஹுசைன் ஹக்கானி கூறியுள்ளார்.






ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இம்மாத இறுதியில் நடக்கவுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி, வரும், 21ல், அமெரிக்கா செல்லவுள்ளார். அச்சமயத்தில், 22ல், ஹூஸ்டன் நகரில், அங்கு வசிக்கும் இந்தியர்களால், 'ஹவ்டி மோடி' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களிடையே, பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.





இந்த நிகழ்ச்சியில், மோடியுடன் இணைந்து, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்பும் பங்கேற்கவுள்ளதாக, அதிபரின் வெள்ளை மாளிகை சார்பில், நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.இது குறித்து, அமெரிக்காவுக்கான, பாக்., முன்னாள் துாதர், ஹுசைன் ஹக்கானி, நேற்று கூறியதாவது:'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கவுள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன் மூலம், டிரம்பின் நெருங்கிய மற்றும் மிகச் சிறந்த நண்பர், மோடி என்பதும், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு, இந்தியா என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அப்போது, டிரம்ப், இதுபோன்ற நிகழ்ச்சி எதிலும், இம்ரான் கானுடன் இணைந்து பங்கேற்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.




இந்திய பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான் கான் ஆகியோரை, விரைவில் சந்தித்து பேசவுள்ளேன். இந்தியா - பாக்., இடையே நிலவிய பதற்றம், பெருமளவு குறைந்துள்ளது. ஆக்கப்பூர்வமான முயற்சிகளை, இரு நாடுகளும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
18-செப்-201914:52:44 IST Report Abuse
Babu அப்பாடா!! இனி ஏழைகள் வாழ்வில் ஏறுமுகம் தான். ஒன்றுக்கு இரண்டாக .......சிரிப்பவன் தேசதுரோகி. கோபம் வருபவனுக்கு உள்ளது உள்ளத்தில் புரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
18-செப்-201911:00:23 IST Report Abuse
Arun Kumar பக்கா கிறிஸ்தவனும் பக்கா இந்துவும் சிறந்த நண்பர்கள்..ப்ப்பா ...... அப்போ சில்லறை பசங்கதான் அடிச்சிக்கிட்டு இருக்கானுங்களோ மதம் மதம்ன்னு....ஹி ஹி ஹி ஹி ......
Rate this:
Share this comment
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
18-செப்-201907:20:20 IST Report Abuse
amuthan இரண்டும் காமடி பீஸ்கள்
Rate this:
Share this comment
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201912:00:12 IST Report Abuse
Thiaguசார் இப்போல்லாம் மத மாற்றம் ரொம்ப கஷ்டமா இருக்கு கன்யாகுமாரில...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X