பரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை: சிதம்பரம்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (55)
Advertisement

புதுடில்லி: "ஒருங்கிணைந்த இந்தியாவை ஆதரிப்பதில் காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக வேறு யாரும் இல்லை'' என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங். மூத்த தலைவருமான சிதம்பரம் கூறியுள்ளார்.






'ஐ.என்.எக்ஸ். மீடியா' மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தனது கருத்துக்களை சிதம்பரம் பதிவிட்டு வருகிறார். வீட்டுக்காவலில் இருந்த ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் சிதம்பரம் கூறியிருந்ததாவது: ஜம்மு - காஷ்மீரையும் சேர்த்து ஒருங்கிணைந்த இந்தியாவை ஆதரிப்பதில் காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு நிகராக வேறு யாரும் இல்லை. இவ்வாறு சிதம்பரம் கூறியிருந்தார்.


வைகோ மனுவே காரணம்:


பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து காங். மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை காஷ்மீரில் 92 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர் என பா.ஜ. கூறியது.




'பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டவில்லை' என பார்லிமென்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என்றால் பரூக் அப்துல்லாவை இப்போது பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது ஏன்; வைகோ மனு தாக்கல் செய்தது தானே காரணம்? இவ்வாறு கபில் சிபல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
19-செப்-201903:21:12 IST Report Abuse
meenakshisundaram ஆஹா அப்போ பாரூக்கை ஜனாதிபதி ஆக்கிடலாம் என்கிறாரா?-'வருங்கால ஜனாதிபதி .வாழ்க வடிவேல் Livingston காமெடியா?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
18-செப்-201914:36:21 IST Report Abuse
இந்தியன் kumar தெய்வம் எப்போதும் நின்று தான் கொல்லும், ஊழல் பண்ணியவர்கள் ஒரு போதும் இறைவன் பாதையில் இருந் தப்பிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
sundar - singapore,சிங்கப்பூர்
18-செப்-201913:31:25 IST Report Abuse
sundar இவன் மகனையும் விடாதீங்க..காங்கிரஸ் நல்ல தலைவர்களை கபளீகரம் செய்துவிட்டது..மக்களுக்கு என்றும் வரலாறு புரியும்.இனி அரசியலில் ஏமாற்ற இடம் இல்லை எந்த கட்சியாக இருந்தாலும் ஏமாற்றினால் அடுத்து நீங்கள்.. அத்துணை வளம் இருந்தும் இன்னும் ஏழை நாடு..என்று மக்கள் நிம்மதியாக வாழ முடியும்..நடக்கும் என்ற நம்பிக்கையில்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X