பொது செய்தி

இந்தியா

ரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்!

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: பிரதமர் மோடியின் புகைப்பட ஸ்டாண்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டு உள்ளது.latest tamil newsபிரதமர் மோடியின் பயணங்கள், விழாக்கள் மற்றும் சந்திப்புகளின் போது அவருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் கடந்த 14ம் தேதி முதல்'ஆன்லைன்'வாயிலாக ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை www.pmmementos.gov.in என்ற இணையத்தளத்தில் ஏலத்தில் வாங்கலாம். இந்த விற்பனை அடுத்த மாதம் 3ம் தேதி முடிவு பெறுகிறது. இதில் திரட்டப்படும் தொகை கங்கை நதி துாய்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.


latest tamil newsபிரதமரின் பரிசுப் பொருட்களை ஏலம் எடுக்க பலரும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரதமர் மோடியின் புகைப்பட'ஸ்டான்டி'ன் அடிப்படை விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு கோடி ரூபாய்க்கு ஓருவர் ஏலம் கேட்டு உள்ளார். இதேபோல் பிரதமர் மோடிக்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வெள்ளிகுடத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட தேங்காயை வைத்து பரிசாக வழங்கினர். இதன் அடிப்படை விலை 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.


latest tamil newsகன்றுக்கு பசு பால் கொடுக்கும் உலோக சிலையின் அடிப்படை விலை 1500 ரூபாயாக நிர்ணியக்கப்பட்டுள்ளது. இதை 51 லட்ச ரூபாய்க்கு ஒருவர் ஏலம் கேட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
19-செப்-201912:35:22 IST Report Abuse
Jayvee தனக்கு பதவியில் இருக்கும் பொது கிடைக்கும் பரிசுப்பொருட்கள் அரசையே சாரும் என்பது தெரிந்தும் இரவோடு இரவாக எடுத்து சென்ற காங்கிரஸ் ஜனாதிபதிக்கு இவர் எவ்வளவோ மேல்.. அப்படி சேர்த்த பொருட்களை அறிவாலயத்தில் ஏலம் விட்டு அந்த பணத்தை சுருட்டும் கழக கண்மணிகளுக்கு இது பொறாமையாக தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
18-செப்-201912:11:43 IST Report Abuse
த.இராஜகுமார் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த நல்ல வழி.. மோடி உபயோக படுத்தின எல்லா பொருள்களையும் ஏலம் விட்டால் நாட்டுக்கு நெறய பணம் கிடைக்கும்.. பொருளாதாரம் உயர்ந்துவிடும்
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
18-செப்-201912:57:56 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇவர் சொல்படி பார்த்தால் பிரதிபா பாட்டில் சுட்டுக்கொண்டு போன எல்லா பொருட்களையும் அன்றைக்கு ஏலம் விட்டிருந்தால் விண்ணை முட்டியிருந்த அன்றைய விலைவாசி சர்ரென்று குறைந்திருக்கும் போலிருக்கிறதே. சாருக்கு ஒரு சொரியார் விருது பார்சல்....
Rate this:
Share this comment
Cancel
truth tofday - india,இந்தியா
18-செப்-201908:46:51 IST Report Abuse
truth tofday ithu ulaithu sambathikkravargal inthalavukku panam koduth vanga mudiyathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X