பொது செய்தி

இந்தியா

மற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி: மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை திட்டம் ஒன்றை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிக்க உள்ளார்.






சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து, நம் நாட்டில் வளர்ச்சியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், சமீபத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.

நான்கு முக்கியத் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகளில் தளர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரியில் இருந்து சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும் என நிர்மலா அறிவித்தார்.





இந்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக மற்றொரு சலுகை திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் செய்தியாளர்களை சந்திக்க உள்ள, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
19-செப்-201910:52:50 IST Report Abuse
ganapati sb சூழ்நிலைக்கேற்ப துரிதமாக செயல்படும் நிதி அமைச்சருக்கு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
19-செப்-201908:49:37 IST Report Abuse
Natarajan Ramasamy பொருளாதாரம்,GDP , பண வீக்கம்,Economics, indicators, டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு, சென்செஸ் இவையெல்லாம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்த, வெளி நாட்டில் படித்த பொருளாதார மேதாவிகள் கைங்கர்யம். நேரு காலத்து இந்தியாவில் உணவு பற்றாக்குறைக்காக, கையேன்றும் நிலையில் இருந்தது.பொருளாதார மேதாவிகள், அமெரிக்க விலிருந்து கோதுமையை PL 420 மூலம் கொண்டுவந்தார்கள். PL என்பது பிச்சாய் அல்ல- பப்ளிக் loan -கடன். லால் பகதூர் சாஸ்திரி, சரியான வழி விவசாயத்தை பெருக்குவது என்று கண்டார். நம்மை விட சிறிய நாடுகளாகிய ஜப்பான், வியட்நாம் என்ன செய்கிறது என்று அறிந்து, விவசாய research பௌண்டடின் மூலம் ஒரு போகத்திலிருந்து,3 அல்லது 4 போகம் எப்படி செய்ய முடியும் என்பதை கண்டறிய வழி செய்தார் THANKS TO MS SWAMINTHAN & TEAM. இந்த வழி பின்பற்றப்பட வில்லை என்றால் நாம் இன்றும் மீளாக்கடனில் உணவுக்கு வெளி நாட்டை நாடியிருப்போம். பேங்க் களுக்கு FDI என்பது மிக மிக தவறான பொருளாதார சித்தாந்தம். வெளி நாட்டான் நமக்கு கடன் கொடுப்பது லாபான் ஈட்டவே. நம் சொந்த மண்ணின் தொழில் செய்பவர் நன்மைக்காக, நாம் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், FDI தங்கள் பணத்தை திரும்பி எடுத்து விடுவார்கள். ராஜன் போன்ற மேதாவிகள் வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டும் என்பார்கள். ஜப்பானில் வட்டி மிக மிக குறைவு-almost ZERO, US இல் 2 %.UK இல் நீங்கள் வீடு வாங்கினால் வட்டி 2 இலிருந்து 3%. பொருளாதார மேதை மன் மோகன் சிங்க் காலத்தில் FDI ஐ கொண்டுவர, மெலினியும் பாண்ட் என்று US DOLLAR டெபாசிட் இருக்கு 15% கொடுத்தார். கஷ்டப்பட்டு சம்பாதித்து சேமித்து வாய்த்த இந்தியனின் பணமும் FDI இல் வந்த பணமும் , வங்கிகளிடமிருந்து எப்படி உபயோப்படுகிறது என்பதை சரியாக கண்கணிக்க தவறியது அரசாங்கம். இன்றைய நெருக்கடிக்கு காரணம் வந்த FDI இல் பெரும்பங்கு இந்தியாவை விட்டு ஓடிப்போன,மல்லய்யா, மோடி, மற்றும் இன்றும் இங்கு இருக்கும் NPA க்கு காரணமான,முதலாளிகளால்.தேங்க்ஸ் டு மன் மோகன் & பிக். வந்த FDI பணத்தை விவசாயம், மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் செலவிடவில்லை. காரணம், மன்மோகன் சிங்க், பி. சிதம்பரம்,அருண் ஜெய்த்தலை,ஆகிய ஹார்வர்ட்/கேம்பிரிட்ஜ்/படித்தவர்கள். என்ன செய்யலாம்: 1 ) வங்கிகள் NPA மீது முழு கவனம் செய்து, இந்த வருட முடிவுற்க்குள் அவைகளை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.அரசு தவறு செய்த வாங்கி அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். நீதித்துறை இதை PRIORITY இல் எடுத்து முடிக்க வேண்டும். தயவு தாட்சன்யம் கூடாது. 2 ) சிறு சிறு வயல் வெளிகள் விவசாயிக்கு நஷ்டத்தை தரும். விவசாய நிலம்களை சேர்த்து 50 ஏக்கர் அளவுக்கு ஒரு நில கூட்டுறவு அமைக்க வேண்டும். இதில் நில சொந்தம் மாறாமல் பங்குதாரர்கள் ( ஷேர்) போல் சேர்க்க வேண்டும். அப்படி சேர்ந்த கூட்டுறவுக்கு முழு அங்கீகாரம் கொடுத்து,வங்கி கடன்,பாசன வசதி, இன்சூரன்ஸ்,கட்டாயமாக வாங்குவோம் என்ற உறுதி ,விற்கும் விலையின் உறுதி இவைகளை அரசு செய்தால், நாடு பொருளாதாரத்தில் கிடு கிடு என்று முன்னேறும். தரிசு நிலங்களை விவசாயத்துக்கு கொண்டு வர வேண்டும். 3) இது மாணவர்களை விவசாயம் சேர்ந்த படிப்புகளின் படிக்க ஈர்க்கும். 4 ) நாட்டின் பொருளாதாரத்தை அனு தினமும் சீர்குலைக்கும்,ஷேர் மார்க்கெட், புல்லின் மார்க்கெட், mutual fund ஆகியவர்ட்டுக்கு vangi வட்டியை விட அதிகமாக மாறும் தன்மையை கட்டு படுத்தவேண்டும். 5)வங்கிகள் நகைகளுக்கு கடன் கொடுப்பதால், pawn புரோக்கர் ஏன்?? வங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் மக்கள் pawn புரோக்கர் களிடம் செல்கிறார்கள். இதில் CHIT FUND உம சேரும். 6) எலக்ட்ரிக் கார்கள் சீக்கிரம் வர நம் பொருளாதாரம் சீக்கிரம் உயரும். அதுவும் லித்தியம் அயன் பேட்டரி இல்லாமல் அலுமினியம்-ஏர் பேட்டரி பற்றி மோடி அரசாங்கம் எடுத்துள்ள மிக மிக,மிக சரியான முடிவு சீக்கிரமே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவும் recharcheable ,இல்லாமல் பிரைமரி செல்லாக செய்தால், இருக்கும் மின்சார உற்பத்தி கார்களுக்கு வேண்டாத நிலை உண்டாகும். இந்த தொழிநுட்பம்,நாடு முழுவதும் சிறு சிறு தொழிற்சாலைகள் அமைக்க வழி செய்யும். சப்ளை செயின் மேனேஜ்மென்ட் வழியில் நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கும்.பெட்ரோலியம் இறக்குமதி 50 %/60 % குறையும். அதுவே நம் அந்நிய செலாவணி நிலைமையை சீர் செய்யும். நம் IIT கல் இந்த தொழில் நுட்பத்தை ஏன் விரிவாக்கவில்லை? இதற்கு ISRAEL இடம் ஏன் செல்ல வேண்டும்? 7) வேலை இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு, ஆப்பிரிக்க,போன்ற நாடுகளில் கட்டாயம் வேலை கிடைக்கும். வெளி நாடு செல்லும் ஒவ்வொரு வேலைக்காரர்களும், அவர்களின் குடும்ப நலனுக்காக வங்கிகள் கடன் கொடுக்கலாம். 8 ) ஏர் இந்தியா போன்ற கட்டுக்கு அடங்காத நிறுவனங்களை மூடி ,இண்டிகோ போன்ற நிறுவனங்களை வளர்க்க வேண்டும். 9 ) ஷிப்பிங் & container டிரான்ஸ்போர்ட், கடல் வழியாக செல்வதை பெருக்கி, ரோடு வழியாக டிரான்ஸ்போர்ட் குறைக்க வழிசெய்யவேண்டும். 10 ) மாத சம்பளம் SEAL செய்ய பட வேண்டும். அதே போல் மக்களின் அத்யாவசிய தேவைகளின் விலை வாசி seal செய்யவேண்டும். நிர்மலா சீதாராமன் மாற்றி யோசித்தால் வழிகள் உண்டு. குழப்புவதற்கு நிறைய TV சேனல் உண்டு. தவறான வழிகளை சொல்ல அரசியல் வாதிகள் உண்டு .
Rate this:
Share this comment
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24-செப்-201911:15:38 IST Report Abuse
Ramalingam Shanmugamமிக மிக அற்புதம் என் மனதில் இருந்ததை சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-செப்-201916:56:40 IST Report Abuse
Endrum Indian ஐயோ தாயி ஒரு இலவசம் கூட வேண்டவே வேண்டாம், ஒரு சலுகையும் வேண்டாம், உங்களால் தொழில்த்துறைக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அதை செய்தாலே போதுமானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X