மற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (23)
Share
புதுடில்லி: மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை திட்டம் ஒன்றை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிக்க உள்ளார்.சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து, நம் நாட்டில் வளர்ச்சியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், சமீபத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.நான்கு

புதுடில்லி: மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகை திட்டம் ஒன்றை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிக்க உள்ளார்.



latest tamil news



சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து, நம் நாட்டில் வளர்ச்சியை அதிகரிக்கவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், சமீபத்தில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.

நான்கு முக்கியத் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான விதிமுறைகளில் தளர்வு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரியில் இருந்து சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும் என நிர்மலா அறிவித்தார்.


latest tamil news



இந்நிலையில் பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக மற்றொரு சலுகை திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் செய்தியாளர்களை சந்திக்க உள்ள, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X