சென்னை: அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில், புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு காலி பணியிடங்களை நிரப்பி கொள்ள வேண்டும். பணி நிரவல் அடிப்படையில், மட்டுமே தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2019 ஆக., 1ம் தேதி அடிப்படையில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், கற்றல் திறனை மேம்படுத்தும் பணிகளில், தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் எனவும் கூறப்பட்டு உள்ளது.