பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : செப் 18, 2019
Advertisement

1 கி.மீ., மண் சாலையால் அவதி: சங்ககிரி, சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம் எதிரே செல்லும் சாலை, குப்தா காலனி வரை, மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில், தண்ணீர் தேங்கி நிற்பதால், சேறு, சகதியாக மாறிவிடுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, இரவில் செல்வோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். அதனால், தார்ச்சாலை அமைக்க, அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆர்.செல்வராஜ், சங்ககிரி.

தாலுகா அலுவலகத்தில் இருக்கை தேவை: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில், ஒன்றிய அலுவலகம், தாலுகா, சார்பதிவாளர், சார்நிலை கருவூலம், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகம், மாவட்ட சிறை உள்ளன. அங்கு வரும் முதியோர், அமர இடமின்றி, தரையில் உட்கார்ந்து விடுகின்றனர். சிலர் கழிப்பறையை தேடி அலைகின்றனர். குறிப்பாக, பெண்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால், மக்கள் அமர இடம், கழிப்பறை வசதி ஏற்படுத்திக்கொடுக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும்.

- வி.சண்முகம், அம்மம்பாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X