பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை, தமிழகம், மழை, இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடில்லி: தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திராவில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மன்னார் வளைகுடாவில், தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், தெற்கு ஆந்திர கரையோரம் கடல் சீற்றத்துடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க, கடலுக்கு செல்ல வேண்டாம் எனக்கூறப்பட்டுள்ளது.







சென்னையில் மழை

இதன் இடையே, சென்னையில், வண்ணாரப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை, காசிமேடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
18-செப்-201912:42:01 IST Report Abuse
Ashanmugam கடந்த இரண்டு வார காலமாக தமிழ் நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனை நல் வழி படுத்தி சேமிக்க தமிழக அரசு இந்நாள் வரை வழி முறைகளை கையாளவில்லை. ஆனால், பொது மக்களை தமிழக அரசாணை மூலம் " மழை நீர்" சேமிப்பு திட்டத்தை கட்டாயபடுத்த வலியுறுத்துகிறது. தமிழ் நாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டை, நீர் நிலை தேக்க தொட்டிகளை போர்கால நடவடிக்கையில் தூர்வார்க்க உத்தரவு பிறப்பிக்காமல், ஓட்டு போட்ட தமிழக மக்களை அதிகார தோரணையில் மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம் தர்மம் சொல்லுங்கோ பார்ப்போம் தமிழக மக்களே? வெளி நாட்டுக்கு சுற்று பயணம் முடித்து வந்த எடப்பாடியார் குரூப் மந்திரிமார்கள் தமிழ் நாட்டிற்கு கற்று வந்து செயல் படுத்த போற பயனுல்ல திட்டம் எதாவது உண்டா?
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
18-செப்-201910:56:56 IST Report Abuse
 Sri,India கண்மாய்களை தூர் வாரியாக கணக்கு முடிக்கப்பட்டு பல ஆயிரம் கோடிகள் ஏப்பம் விட வாய்ப்புள்ளதால் அவரவர் பகுதியில் உள்ள கண்மாய்,ஏரிகளின் பெயரில் கணக்கில் எழுதாமல் இருக்க மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-செப்-201909:32:01 IST Report Abuse
சீனி காலையில் ஒரு நல்ல செய்தி..... நிரம்பட்டும் அனைத்து கிணறு, குளம், ஏரிகளும். வாழ்க மழை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X