இந்தியாவுக்கு முன்னுரிமை: அமெரிக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
இந்தியா, அமெரிக்கா, வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து, ஜிஎஸ்பி,

வாஷிங்டன்: இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை, மீண்டும் அளிக்க வேண்டும் என அமெரிக்க அரசிற்கு, அந்நாட்டு எம்.பி.,க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
வளரும் நாடுகள், பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, வர்த்தக முன்னுரிமை அளிக்கும் (ஜிஎஸ்பி) திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. இதன்படி, வளரும் நாடுகள் வரியின்றி, அமெரிக்காவுக்கு தங்கள் நாட்டில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும்.
இந்த சலுகை, வளரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்திய சந்தையை அமெரிக்கா எளிதாக அணுகுவது குறித்து அந்நாடு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை எனக்கூறி, வர்த்தக முன்னுரிமை சலுகையை டிரம்ப் ரத்து செய்தார். இதற்கு, இந்தியா அதிருப்தி தெரிவித்திருந்தது.


இது தொடர்பாக அந்நாட்டு எம்.பி.,க்கள் 44 பேர், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிஜருக்கு எழுதிய கடிதம்: வர்த்தக விவகாரத்தில், அமெரிக்க அரசு, இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம், தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கு தீர்க்க புதிய வாய்ப்புகள் ஏற்படும். அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள், இந்திய சந்தையை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்தியாவிற்கு, மீண்டும் வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bdhdj -  ( Posted via: Dinamalar Android App )
18-செப்-201918:26:00 IST Report Abuse
bdhdj Great and mass population is under marketing for us companies say, medicines and all kind of products they will sell here, for the sake of dollars and make Indians health issues and low quality items etc., to make the society degradation in India.
Rate this:
Share this comment
Cancel
bdhdj -  ( Posted via: Dinamalar Android App )
18-செப்-201918:25:57 IST Report Abuse
bdhdj Great and mass population is under marketing for us companies say, medicines and all kind of products they will sell here, for the sake of dollars and make Indians health issues and low quality items etc., to make the society degradation in India.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-செப்-201915:42:19 IST Report Abuse
Nallavan Nallavan அந்தச் சலுகை இந்தியாவுக்கு கிடைச்சிட்டுதான் இருந்துச்சு ............. அதனால நாம ஒண்ணும் பெருசா கிளிச்சுட்டதா எனக்குத் தோணலை .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X