பொது செய்தி

தமிழ்நாடு

சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஸ்டாலின் ஆறுதல்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை: சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், டூவிலரில் சென்ற, சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்தார். பின்னால், வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். சுபஸ்ரீ குடும்பத்திற்கு, ம.நீ.மை., தலைவர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணனர், திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஆகியோர், ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினும், குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.



இதன் பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவினர், சட்டவிரோதமாக பேனர் வைக்கக்கூடாது. அதிகாரிகள், போலீசார் அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும். மீறி வைப்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2017 ல் நான், திமுக செயல் தலைவராக பதவியேற்ற போதே கூறியுள்ளேன். ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஐகோர்ட் உத்தரவை மீறி வருகின்றனர். ஒன்று அல்லது இரண்டு பேனர்களுக்கு அனுமதி பெற்று கொண்டு, வழி நெடுகிலும், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்கின்றனர். இதற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தாலும், அதனை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவில்லை. சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். பேனர் கலாசாரம் இருக்கக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம். சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
18-செப்-201915:44:03 IST Report Abuse
S.P. Barucha சுபஸ்ரீ குடும்பத்திற்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி மிக்க நன்றி. சாதி சங்க தலைவர்களை உள்ளே போட வேண்டும். அப்பத்தான் அடங்குவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-செப்-201913:10:56 IST Report Abuse
Nallavan Nallavan அங்கிள் ........ ஆண்ட்டி ......... அது பாவக்காசு .......... வாங்காதீங்கோ .....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-செப்-201918:45:48 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ......... அதுக்கு பதில் நீங்க குடுத்துடுறீங்களா ஜி ?...
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-செப்-201912:27:01 IST Report Abuse
சீனி இந்த விசயத்தில அதிமுக மேல முழு தவறு இருந்தாலும், போட்டி போட்டு அரசியல் எல்லா அரசியல் கட்சிகளும் விதிமுறைகளை மீறியதால் சுபஸ்ரீ மரணம் ஏற்ப்பட்டிருக்கு... இதை முதல்ல கட்சிகள் ஒத்துக்கொள்ளவேண்டும். முதல்ல பொது இடத்தில் உள்ள திமுக கொடிக்கம்பத்தை அப்புறபடுத்துங்க. அப்புறம் போட்டோ ஆதாரத்தோட அறிவாலயம் வந்து பேனர் இருக்க இடத்தை புகார் கொடுத்தா பேனரை அப்புறப்படுத்துவிங்களா? உயிருக்கு உத்தவாதம் கொடுத்தா ஒரு டஜன் பேரு வர்ரத்துக்கு இன்னைக்கே ரெடியா இருக்காங்க...... பேனர் பத்தி கம்ப்ளைட் கொடுக்க போன் நெம்பராவது கொடுங்க பார்ப்போம். கண்துடைப்பு வேலை செய்யக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X