செயின் பறிப்பில் பெண் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயின் பறிப்பில் பெண் படுகாயம்

Added : செப் 18, 2019
Share
திருச்சி: கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம், மற்றொரு பைக்கில் வந்து, ஆறரை பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.திருச்சி, சோமரசம்பேட்டை, பாரதி தெருவைச் சேர்ந்தவர் உமா, 55. இவர், நேற்று முன்தினம் அதிகாலை, தனது கணவர் சுகுமாருடன், திருச்சி ஜங்ஷனில் இருந்து, டி.வி.எஸ்., பைக்கில், வீட்டுக்கு சென்றார். அவர்கள் தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்

திருச்சி: கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம், மற்றொரு பைக்கில் வந்து, ஆறரை பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.
திருச்சி, சோமரசம்பேட்டை, பாரதி தெருவைச் சேர்ந்தவர் உமா, 55. இவர், நேற்று முன்தினம் அதிகாலை, தனது கணவர் சுகுமாருடன், திருச்சி ஜங்ஷனில் இருந்து, டி.வி.எஸ்., பைக்கில், வீட்டுக்கு சென்றார். அவர்கள் தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் பின்தொடர்ந்து வந்து, உமா அணிந்திருந்த, ஆறரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்து உமா அளித்த புகாரின்படி, கண்டோன்மெண்ட் போலீசார், வழக்குப் பதிவு செய்த மர்மநபரை தேடி வருகின்றனர்.

கோவில் அருகே செயின் பறிக்க முயற்சி: திருச்சி, கலெக்டர் அலுவலக சாலை, மாரீஸ் அவென்யூவில் வசிப்பவர் அமுதவள்ளி, 46. இவர் நேற்று முன்தினம் அதிகாலை, ஐயப்பன் கோவில் அருகே தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர், அமுதவள்ளி அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார். அதில் அமுதவள்ளி கீழே விழுந்து, அவரது கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அந்த மர்ம நபர் தப்பியோடி விட்டார். காயமடைந்த அமுதவள்ளி, திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீதிமன்ற குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X