பொது செய்தி

தமிழ்நாடு

காலி மனை: சேலம் மாநகராட்சி எச்சரிக்கை

Added : செப் 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்ட அறிக்கை: சேலத்தில் காலி மனைகளை, உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் குப்பை, மழைநீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த மனைகளை, மாநகராட்சியே சுத்தம் செய்து, மாநகராட்சி வசமாக்கப்படும். அந்த இடத்தில், பூங்கா, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானமாக மாற்றப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி மனைகளில் தேங்கியிருக்கும் குப்பைகள், முட்புதற்கள் மற்றும் மழைநீரால் தொற்று நோய்கள் பரவுகிறது. எனவே, ஒருவாரத்திற்குள் அவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில், மாநகராட்சி நிர்வாகமே அந்த காலி மனைகளை சுத்தப்படுத்தி, அங்கு, பொதுமக்களுக்கு பயன்பட கூடிய வகையில் பூங்காக்கள், சமுதாய கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்; அத்துடன், சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். மாநகர பகுதிகளில் தற்போது தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பொது சுகாதார மேம்பாடு கருதி, காலிமனை உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jisuki - Doha,கத்தார்
18-செப்-201917:44:02 IST Report Abuse
jisuki இது சரியான நடவடிக்கை இல்லை.சுத்தம் செய்வதற்கு தேவையான பணம் மற்றும் அபராதம் வசூலிக்கலாம் .இல்லை இதனால் பிரச்சனைகள் ஏற்படலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X