அயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் கெடு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Ayodhya Case, sc, Court, Deadline,  Mediation,  சுப்ரீம் கோர்ட்,  அயோத்தி வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்,

புதுடில்லி : அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு இறுதி வாதங்களையும் அக்., 18 க்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தை, அமைதியான முறையில் பேசித் தீர்க்க அமைக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை, ஆகஸ்ட் முதல் நாள் தோறும் விசாரித்து வருகிறது.





இந்நிலையில், இந்த வழக்கு, இன்று(செப்., 18) விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அயோத்தி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் அக்.,1 8 க்குள் முடிக்க வேண்டும். இதற்காக விசாரணையை தினமும் ஒரு மணி நேரம் நீட்டிக்கவும், சனிக்கிழமை அன்றும் வழக்கை விசாரிக்கவும் தயாராக உள்ளோம். அனைவரும் சேர்ந்து வழக்கை அக்.,18 க்குள் முடிக்க முயற்சி செய்வோம். மனுதாரர்கள் விரும்பினால், மத்தியஸ்தம் மூலம், பிரச்னையை தீர்த்து கொள்ளலாம் எனக்கூறினார்.

இறுதி வாதங்களை அக்.,18 க்குள் முடிக்கப்பட்டால், நவ.,17 க்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவ.,17 ல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
18-செப்-201915:15:30 IST Report Abuse
ganapati sb அந்நியன் பாபர் ஆக்கிரமித்த முல்லை நில கடவுள் மாயோன் ராமன் அவதரித்த இடத்தை உடனடியாக குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்ற மண்ணின் மைந்தர் அனைவரும் மகிழ்ச்சியுற ஆலயம் எழுப்ப ஒப்படைக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pandianpillai Pandi - chennai,இந்தியா
18-செப்-201913:23:52 IST Report Abuse
Pandianpillai Pandi தேவையற்ற வழக்கு. வாழ்வியலில் ஹிந்துக்களுக்கு சொல்லப்பட்ட இதிகாசங்களில் இடம் பெற்றிருக்கும் ஒரு புனித இடத்தை ஹிந்துக்கள் எவ்வாறு விட்டுக் கொடுப்பார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை பெரியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வரலாறுகளை பார்க்கவேண்டும் எத்தனை ஹிந்துக்களின் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட ஹிந்துக்கள் கோயில்களை மீட்க ஹிந்துக்கள் போராட்டம் செய்தால் என்ன நடக்கும்??? ஹிந்துக்களுக்கு புனித இடம் என்று எந்த நாட்டிற்கு செல்வார்கள்? இதில் முக்கியமாக பார்க்கவேண்டியது இடம் யாருக்கு சொந்தம் என்பதல்ல. வரலாற்றுப்படி அது ஹிந்துக்களின் புனித இடமா என்பதே? ஹிந்துக்களின் வாழ்வியல் முறைகளை உணர்த்துவது கடவுளின் ராம அவதாரம். சுருக்கமாக சொன்னால் ஹிந்துக்கள் ஆகிய நாங்கள் சமரசத்திற்கு தயாரில்லை... இடம் எங்கள் மதத்துக்கே சொந்தம்.
Rate this:
Share this comment
Cancel
18-செப்-201912:55:18 IST Report Abuse
ஆப்பு என்ன அவசரம்? ராமாயணம் முடிஞ்சு ஒரு 5000 , 10000 வருஷம்தானே ஆயிருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X