காஷ்மீர் தலைவர்கள் 18 மாதம் ‛உள்ளே'

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (42)
Share
Advertisement
புதுடில்லி : காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் 370 சட்டப்பிரிவு ஆக.,5 ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பதற்றமான சூழல் ஏற்படுவதை தவிர்க்க காஷ்மீர்

புதுடில்லி : காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் 18 மாதங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.



latest tamil news



காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் 370 சட்டப்பிரிவு ஆக.,5 ம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பதற்றமான சூழல் ஏற்படுவதை தவிர்க்க காஷ்மீர் முழுவதும் இணையதள சேவை, மொபைல் சேவை முடக்கம், 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தற்போது காஷ்மீரில் இயல்புநிலை திரும்பியதை அடுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. இருந்தும் அரசியல் தலைவர்களின் வீட்டுக்காவல் தொடர்ந்து வருகிறது.


latest tamil news



இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 18 மாதங்களுக்குள் காஷ்மீர் தலைவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். நேற்று போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போதும் காஷ்மீர் தலைவர்கள் 18 மாதங்களுக்கும் விடுதலை செய்யப்படுவார்கள் என உறுதிபட தெரிவித்தார்.
காஷ்மீர் தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என தெரியாமல் இருந்த நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் முதல் முறையாக இதுபற்றி பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் போன்று அனைத்து விதிகளும் நடைமுறைபடுத்தப்பட்டு, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) எவ்வளவு நாள் பூமிக்கடியில் இருந்து இருக்கமாகிறதோ அதை பொறுத்தே வைரத்தின் மதிப்பு கூடும். அது போலத்தான் மக்களுக்காக போராடும் தலைவர்களும் அநீதிக்கு எதிராக போராடி சிறையில் எவ்வளவு நாட்கள் இருக்கிறார்களோ அவ்வளவு மதிப்பு கூடும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-செப்-201908:14:24 IST Report Abuse
Natarajan Ramanathan பதினெட்டு மாதங்கள் போதும். ஆனால் அதற்குள் அனைவரும் கண்டிப்பாக வழுக்கி விழ வேண்டும்.... இல்லை என்றால் வழுக்கி விழும் வரை சிறையில் இருக்க வேண்டும்..... எப்படி வசதி??
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-செப்-201918:03:40 IST Report Abuse
J.V. Iyer என்னங்கோ 18 மாதங்கள் என்று கூறி பயமுறுத்துகிறீர்கள் அவர்களை வெளியில் விடவேண்டாம். காஷ்மீர் சிறப்படையும். இவர்கள் கான்சர் கிருமிகள். அழிக்கவேண்டியவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X