பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த சம்பவங்களுக்கு ஆண்டிமடம் அருகேயுள்ள கஞ்சமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்கிற குண்டு மணி (50) தான் காரணம் என போலீசாருக்கு தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்த மணியை பிடித்த தனிப்படை போலீசார் அரியலூர் போக்குவரத்து போலீஸ் அலுவலகத்தில் வைத்து கடந்த 3 நாட்களாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு(செப்.,17) திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மணி மயக்கமடைந்தார். அவரை போலீசார் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் தாக்கியதால் மணி இறந்ததாக தகவல் வெளியானதால் இறந்த மணியின் சொந்த ஊரான ஆண்டிமடம் கஞ்சமலைப்பட்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE