பொது செய்தி

இந்தியா

எல்லைகள் பற்றி வரலாற்று ஆய்விற்கு அனுமதி

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி : இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.






இந்திய எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்வது தொடர்பாக இந்திய வரலாற்று ஆய்வு கழகம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆவண காப்பக இயக்குனரகம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று (செப்.,17) ஆலோசனை நடத்தினார்.
இதில் எல்லைகள் குறித்த வரலாறுகளை ஆய்வு செய்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் இன்று (செப்.,18) அனுமதி அளித்துள்ளார்.




எவ்வாறு எல்லைகள் வகுக்கப்பட்டது, எல்லைகள் மாற்றப்பட்டது, இதில் பாதுகாப்பு படையினரின் பங்கு, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பங்கு, அவர்களின் கலாச்சாரம், சமூக - பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கி, பல கோணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. எல்லைகள் தொடர்பான வரலாற்று ஆய்வுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்விற்கு பிறகு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, திபெத், இலங்கை ஆகியவற்றுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண வழி கிடைக்கும் என இந்திய அரசு கருதுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
19-செப்-201902:47:51 IST Report Abuse
ashak ரொம்ப முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
18-செப்-201922:16:08 IST Report Abuse
அம்பி ஐயர் இதுல நம்ம தில்லு முல்லுக் கழக ஆளுங்க அவ்ங்க ஆஸ்தான லயோலா நீல்சன் போன்ற கம்பெனிகளை வைத்து ஆய்வு செய்தால் என்ன சொல்லுவாங்க தெரியுமே....???? இந்தியாவின் நெல்லை வடக்கே டில்லியிலிருந்து தெற்கே திருப்பதியிலும்.... கிழக்கே ஒதிசாவிலிருந்து மேற்கே மகாராஷ்ட்ரா வரையிலும் மட்டுமே இந்தியாவோட எல்லைகள்...ன்னு முடிவே பண்ணியிருப்பாங்க....
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
18-செப்-201916:29:29 IST Report Abuse
Sandru நாடு பொருளாதார சிக்கலை சந்திக்கும் நேரத்தில் இவர்கள் பிடில் வாசித்து கொண்டு இருக்கிறார்கள். கையாலாகாத ஆட்சியாளர்கள்.
Rate this:
Share this comment
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-செப்-201916:46:07 IST Report Abuse
Thiaguபிரியுதப்பா,உனுக்கு இன்னும் சம்பளம் வரல,ஷர்ஸ் லாஸ் ,mutualfund போச்சி ,கார் வாங்க முடியல ,குடும்பத்தோட ரோட்ல பிச்சை எடுக்கற ,பாவம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X