எல்லைகள் பற்றி வரலாற்று ஆய்விற்கு அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எல்லைகள் பற்றி வரலாற்று ஆய்விற்கு அனுமதி

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (12)
Share

புதுடில்லி : இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.



latest tamil news



இந்திய எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்வது தொடர்பாக இந்திய வரலாற்று ஆய்வு கழகம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆவண காப்பக இயக்குனரகம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று (செப்.,17) ஆலோசனை நடத்தினார்.
இதில் எல்லைகள் குறித்த வரலாறுகளை ஆய்வு செய்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் இன்று (செப்.,18) அனுமதி அளித்துள்ளார்.


latest tamil news


எவ்வாறு எல்லைகள் வகுக்கப்பட்டது, எல்லைகள் மாற்றப்பட்டது, இதில் பாதுகாப்பு படையினரின் பங்கு, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பங்கு, அவர்களின் கலாச்சாரம், சமூக - பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கி, பல கோணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. எல்லைகள் தொடர்பான வரலாற்று ஆய்வுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்விற்கு பிறகு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, திபெத், இலங்கை ஆகியவற்றுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண வழி கிடைக்கும் என இந்திய அரசு கருதுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X