சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாத்திரையில் இரும்பு கம்பி

Added : செப் 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement

கோவை: கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் முஸ்தபா. பல் வலி காரணமாக, மருந்து கடையில் மாத்திரை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து மாத்திரையை பார்த்த போது, அதில் இரும்பு கம்பி இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் மருந்து கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, மாத்திரையை, தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து, நாங்கள் வாங்கி விற்பதால், தங்களுக்கு இதில் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாத்திரையை தயாரித்த நிறுவனம் மீது சுகாதாரத்துறையிடம் புகார் தெரிவிக்க முஸ்தபா முடிவு செய்துள்ளார்.

கோவை கரும்புகடையை சேர்ந்த முஸ்தபா, பல் வலிக்காக அங்கிருக்கும் மருந்துக்கடையில் ofloxacin மாத்திரை வாங்கியுள்ளார். அதை சாப்பிடுவதற்காக பிரித்து வாயில் போடுவதற்கு முன் சட்டென அதை கவனித்தபோது, அந்த மாத்திரையின் உட்பகுதியில் சிறிய கம்பி இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த முஸ்தபா, மருந்து கடையில் முறையிட்டார். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்தார். கம்பியுடன் இருந்த மாத்திரியை அவர் விழுங்கியிருந்தால், உடலில் பெரும் பிரச்னை ஏற்பட்டிருக்கும். மாத்திரைகளை சாப்பிடும்முன், அவற்றை இரண்டாக உடைத்து பார்ப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
18-செப்-201918:25:57 IST Report Abuse
Raj இனி மாத்திரைகள் பாக் செயும்முன் மெட்டல் டிடக்டரில் செக்செய்து அனுப்ப வேண்டும் இதுமாதிரி கம்பெனிக்கு பல கோடி பெனால்டி அடிக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-செப்-201917:58:13 IST Report Abuse
Darmavan எல்லா வாடிக்கையாளர்களும் இப்படி சொல்லி தப்பிக்கிறார்கள்.எவன் ஒரு பொருளுக்கு பணம் வாங்குகிறானோ அவன் அதன் தரம்/குறைகளுக்கும் பொறுப்பு சட்டம் இப்படி நிறுத்தப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
18-செப்-201916:05:02 IST Report Abuse
pattikkaattaan கொடுமைடா சாமி .. இனி ஒவ்வொரு மாத்திரையையும் பொடி செய்துதான் சாப்பிடவேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X