பாக்., வீரர்களை விரட்டிய இந்திய ராணுவம்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (10)
Advertisement
பாகிஸ்தான், இந்திய ராணுவம், ஊடுருவல், ராணுவம்,

ஜம்மு: காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்களை, இந்திய ராணுவம் குண்டுகளை வீசி விரட்டியடித்தது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், காஷ்மீரின் உரி, கெரான், பூஞ்ச், மெந்தார் மற்றும் நவுசேரா செக்டார் ஒட்டிய எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை குவித்துள்ளது. மேலும்,
அதே பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும் , பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருவதுடன், அந்நாட்டின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.




இந்நிலையில், கடந்த செப்., 12 -13 இரவில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபுர் செக்டார் வழியாக, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். இதனை கண்ட இந்திய ராணுவம், பாகிஸ்தான் வீரர்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, பாகிஸ்தான் வீரர்கள், தங்கள் பகுதிக்கு திரும்பி சென்றனர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்திய நிலைகள் மீது தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 2 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து, வெள்ளைக்கொடி ஏந்தி வந்த பாகிஸ்தான் ராணுவம், தனது வீரர்களின் சடலத்தை எடுத்து சென்றது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-செப்-201919:13:32 IST Report Abuse
Sampath Kumar எல்லாம்சரி தான் இன்னும் எத்தனை நாள் இப்படியே போகும்
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-செப்-201917:20:43 IST Report Abuse
சீனி மாட்டுறவன் பிருஷ்டத்துல நாலு அடி வெளுத்து பச்சை குத்தி தொரத்தி விடுங்க. அடுத்தவாட்டி மாட்டுனான்னா சொல்லி சொல்லி அடிக்கிறத்துக்கு வசதியா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
18-செப்-201916:52:25 IST Report Abuse
blocked user கவனித்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. எல்லைக்கோட்டை இனி பாகிஸ்தான் நோக்கி நகர்த்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X