பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு வாசம்: இந்தியர்கள் முதலிடம்

Added : செப் 18, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி : வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது.



latest tamil news



சொந்த நாடுகளை விட்டு இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் நாட்டினர் குறித்த புள்ளிவிபர பட்டியலை ஐ.நா., சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில், உலகம் முழுவதும் சுமார் 272 மில்லியன் பேர் சொந்த நாடுகளை விட்டு, வெளிநாடுகளில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. இவர்களில் 17.5 மில்லியன் பேர் இந்தியர்கள். அதாவது மொத்த இடம் பெயர்ந்த நாட்டினரில் சுமார் 6 சதவீதம்.

அதிகம் இடம்பெயர்ந்த நாட்டினரின் பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து மெக்சிகோ (11.8 மில்லியன்), சீனா (10.7 மில்லியன்) மற்றும் ரஷ்யா (10.5 மில்லியன்) நாட்டினர் இடம்பெற்றுள்ளனர்.
2010 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சொந்த நாடுகளை விட்டு இடம்பெயர்வர்களின் எண்ணிக்கை 2019 ல் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அகதிகளாகவும், வேலைவாய்ப்பிற்காகவும் இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.


latest tamil news



2010 முதல் 2017 வரை மட்டும் உலக அளவில் 13 மில்லியன் பேர் தாய்நாட்டை விட்டு, பிற நாடுகளில் குடியேறி இருக்கின்றனர். அதிகமானவர்கள் தேடி செல்லும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் ஜெர்மனி 2வது இடத்திலும், சவுதி அரேபியா 3வது இடத்திலும் உள்ளன.
சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வாழும் நாடாக அமெரிக்க உள்ளதாக ஐ.நா., புள்ளிவிபரம் கூறுகிறது. அதாவது அமெரிக்காவில் வசிப்பவர்களில் சுமார் 13 மில்லியன் பேர் வேறு நாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்கள்.

அதே சமயம் பிற நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5.1 மில்லியனாக உள்ளது. இவர்களில் 4 சதவீதம் பேர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு, கூடுவாஞ்சேரி திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் அவர்கள் இருக்க விரும்பவில்லை. போராட மனம் இடம் கொடுக்க மறுக்கிறது. தன் திறமையை நம்பி சிறிது துணிவுடன் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நிலைத்து விடுகின்றனர். அங்கும் தங்களது கலாசாரத்தை தீவிரமாக பின் பற்றுகின்றனர். அமெரிக்காவில் விரைவில் திருஅல்லிக்கேணி போல சிறிய ஊர் விரைவில் வருவது இவர்களால் சாத்தியமே. இந்த தீயசக்திகள் இருக்கும் வரை தமிழகத்தில் திறமைக்கு வேலையில்லை. பஸ் டிரைவர் கண்டக்டர் அப்பாயின்ட் முதல் குருப் ஒன் வரை எல்லாவற்றிலும் ஊழலென்றால் எப்படி தமிழகம் முன்னேறும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
19-செப்-201904:29:10 IST Report Abuse
blocked user திராவிட மதத்தினரின் உருட்டல் மிரட்டல், இட ஒதுக்கீடு மற்றும் திறமையுள்ளவர்கள் அதிகம் சம்பாதித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உந்துதல் இந்தியர்கள் பலரை புலம் பெயர வைத்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
Rate this:
Share this comment
Cancel
19-செப்-201903:55:13 IST Report Abuse
தீதும் நன்றும் பிறர் தர வாரா தாய் நாட்டை விட்டு போவது எளிது இல்லை.. வாழ்க்கை தரம் உயரும் என்று வெளியே சென்று உழைக்க வேண்டியதாகிறது.. அனைவரும் வெளியே சுற்றுலா சென்றால், நம் வெளிநாட்டு வாழ் நண்பர்கள் சொந்த ஊருக்கே வர விரும்புகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X