BJP President Amit Shah Working President JP Nadda to visit West Bengal | மே.வங்கத்தில் அமித்ஷா,ஜே.பி.நட்டா சுற்றுப்பயணம்| Dinamalar

மே.வங்கத்தில் அமித்ஷா,ஜே.பி.நட்டா சுற்றுப்பயணம்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)

கோல்கட்டா: பா.ஜ., தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.,நட்டா ஆகியோர் மே.வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளனர்.






இது குறித்து கூறப்படுவதாவது: காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்தசிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆக. 5 ம் தேதி ரத்து செய்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.





இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புஅந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு கூட்டம் நடத்தி விளக்கம் அளிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மே.வங்க மாநிலத்தில் வரும் 27 ம் தேதி ஜே.பி.,நட்டா விளக்கம் அளித்து பேச உள்ளார்.

வரும் அக்., 1 ம் தேதி மே.வங்க மாநிலத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொள்ள உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X