பாக்.,வான்வழியில் செல்ல மோடிக்கு மறுப்பு

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பிரமதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது தன்னுடைய வான்வழியை பயன்படுத்த பாக்., அனுமதி மறுத்துள்ளது.



latest tamil news




கடந்த ஆக. 5 ம் தேதி மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விமானங்கள் தங்களது வான்வழியை பயன்படுத்த பாக். தடை விதித்தது.

இந்நிலையில் வரும் 21-ம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் வான்வழியில் பிரதமர் மோடி விமானம் செல்ல இந்தியாவின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இதனிடையே பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பாக்., வான்வழியே செல்ல பிரதமர் மோடிக்கு அனுமதி வழங்க முடியாது என இந்திய ஹைகமிஷனரிடம் தெரிவித்துள்ளார்.


latest tamil news




முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் வெளிநாடு சென்ற போதும் பாக்., தன்னுடைய வான்வழியை பயன்படுத்த தடை விதித்திருந்தது. தற்போதும் பிரதமருக்கும் அதே போன்று தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
19-செப்-201900:12:48 IST Report Abuse
orange mittai இது சீண்டுவது போல் உள்ளது... பாதுகாப்பு கருதி வேறு வழியில் பயணிப்பதே மேல்...
Rate this:
Cancel
18-செப்-201923:05:08 IST Report Abuse
ஆனந்தி அவங்க கிட்ட எதுக்கு அனுமதி கேட்கும் வான் வழி எல்லோருக்கும் பொதுவானது தலைவரை போக சொல்லுங்க
Rate this:
Cancel
18-செப்-201921:53:43 IST Report Abuse
Ganesan Madurai நாமும் நமது வான்வழியை பொருக்கிஸ்தானுக்குகாக நிரந்தரமாக மூட வேண்டும்
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
18-செப்-201922:47:40 IST Report Abuse
Nallavan Nallavanஅவர்கள் இலங்கை சென்றாலொழிய அவர்களுக்கும் நமது வான்வெளி (வான்வழியை விட இதுதான் சரியான பதமாக எனக்குத் தோன்றுகிறது) தேவைப்படாது ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X