பொது செய்தி

தமிழ்நாடு

2வது டி20: இந்தியா அபார வெற்றி

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

மொகாலி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் கேப்டன் கோஹ்லி அரை சதம் விளாச இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



latest tamil news




இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி கனமழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.


latest tamil news




குயின்டன் அரைசதம்



தென் ஆப்ரிக்க அணிக்கு ரீஜா ஹென்டிரிக்ஸ், கேப்டன் குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்த போது தீபக் சகார் 'வேகத்தில்' ஹென்டிரிக்ஸ் (6) வெளியேறினார். குயின்டன் (52) அரை சதம் விளாசினார். தீபக் சகார் பந்தில் பவுமா (49) சிக்கினார். டுசன் (1), மில்லர் (18) விரைவில் திரும்பினர். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. பிரிட்டோரியஸ் (10), பெலுக்வாயோ (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் சகார் 2 விக்கெட் வீழ்த்தினார்.


கோஹ்லி விளாசல்



பின், களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் (12) ஏமாற்றினார். தவான், கேப்டன் கோஹ்லி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தனர். பிரிட்டோரியஸ் பந்தை கோஹ்லி சிக்சருக்கு பறக்கவிட்டார். தவான் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷாப் (4) ஒற்றை இலக்கில் அவுட்டானார். கோஹ்லி அரை சதம் விளாசினார். ஸ்ரேயாஸ் ஒரு பவுண்டரி அடிக்க, வெற்றி உறுதியானது. இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (72), ஸ்ரேயாஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-செப்-201903:59:38 IST Report Abuse
J.V. Iyer பந்த் சோபிக்கவில்லை. அவர் தேறுவாரா? அவருக்கு நிறைய வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டுவிட்டன. தினேஷ் கார்த்திக் பாவம். எங்கும் அரசியல். இதிலும் அரசியல்.
Rate this:
19-செப்-201905:44:37 IST Report Abuse
ARUN.POINT.BLANK very true why pant?? all bloody politics...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X