பொது செய்தி

இந்தியா

ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தது, 'இஸ்ரோ'

Updated : செப் 20, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
 ஆதரவளித்த,மக்களுக்கு, நன்றி,தெரிவித்தது, 'இஸ்ரோ'

பெங்களூரு,: 'சந்திரயான் - 2வின் 'லேண்டர்' விக்ரம் கருவி, பூமியுடனான தகவல் தொடர்பை இழந்த பின், எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக செய்திகள் அனுப்பி, உடன் நின்ற இந்தியர்கள் அனைவருக்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்' என, 'இஸ்ரோ' தெரிவித்து உள்ளது.

நிலவில் தரை இறங்கி, ஆய்வுகள் மேற்கொள்வதற்காக, 'சந்திரயான் - 2' விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக தன் பயணத்தை துவங்கிய சந்திரயான் - 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற, 'லேண்டர்' விக்ரம் கருவி, இம்மாதம், 7ம் தேதி, நிலவில் தரை இறங்க, 2.1 கி.மீ., தொலைவு இருந்த நேரத்தில், பூமியுடனான தகவல் தொடர்பை இழந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். தங்கள் பல ஆண்டு கனவும், உழைப்பும், பலன் அளிக்காததை கண்டு, கண்ணீர் சிந்தினர்.இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார். 'தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல், வெற்றியை நோக்கி நடைபோடுவோம்' என, உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில், 'லேண்டர்' விக்ரம், தகவல் தொடர்பை இழந்த பின், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, செய்திகளை பகிர்ந்தனர். அவர்களது சாதனைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.இதற்கு, இஸ்ரோ தரப்பில், நன்றி தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இது குறித்து, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், இஸ்ரோ கூறியிருப்பதாவது: கடுமை யான நேரத்தில், எங்களுடன் துணை நின்றதற்கு, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு, நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.ஒவ்வொரு இந்தியனின், கனவையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற, தொடர்ந்து பணியாற்றுவோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201922:52:14 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை அன்றிரவு வைக்கோ வானத்தை பார்த்தது என்னமோ உண்மை தான் என்று மல்லை சத்தியா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்
Rate this:
Cancel
19-செப்-201914:03:50 IST Report Abuse
ஆனந்தி சார் உங்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்கள் அடுத்து நாம் நிலவில் இறங்குகிறோம் உங்களால் முடியும்வந்ததே மாதிரம்
Rate this:
Cancel
19-செப்-201907:59:03 IST Report Abuse
ஆப்பு நோட் பந்தி மாதிரி சின்ன சறுக்கல் தான். விஞ்ஞானிகள் கூட அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு பேசுறாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X