பொது செய்தி

இந்தியா

மோடி விமானத்துக்கு பாக்., அனுமதி மறுப்பு

Updated : செப் 20, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
 மோடி ,விமானத்துக்கு,பாக்., அனுமதி,மறுப்பு

புதுடில்லி,: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா - பாக்., இடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், தன் வான் எல்லையை பயன்படுத்துவதற்கு, பாக்., தடை விதித்திருந்தது.ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, பாக்., வான் எல்லையை பயன்படுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், அனுமதிக்க, பாக்., மறுத்தது.இந்த நிலையில், 'பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும், ஐ.நா., பொது சபை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். '

பாக்., வான் எல்லை வழியாக அவருடைய விமானம் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, பாக்., அரசிடம், மத்திய அரசு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி செல்லும் விமானத்தை, தன் வான்வெளியில் அனுமதிக்க, பாக்., மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-செப்-201921:30:48 IST Report Abuse
Ramki திரு.தமிழவேள் அய்யா அவர்களே, நீங்கள் பயணித்த கத்தார் ஏர்வேஸ் விமானம் சுற்று வழியில் போனதன் காரணம் , எந்த ஒரு கத்தார் ஏர்வேஸ் விமானமும் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள எந்த விமானநிலையத்துடனான சேவைக்கும் இவர்களின் வான்வெளியை பயன்படுத்தவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் இங்கே உள்ள அரசு தடை விதித்துள்ளது. எனவே அவர்களின் விமானம் சுற்று வழியில் பயணிக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.அதன் காரணமாகத்தான் உங்களால் connecting விமானத்தை பிடிக்கமுடியவில்லை.இத்தடை இந்நாட்டின் துறைமுகங்களை பயன்படுத்தவும் உள்ளதால் , ஓமன் நாட்டு துறைமுகம் மூலம் கப்பல் சரக்கு போக்குவத்தும் ஓமன் வழியாக நடைபெறுகிறது.
Rate this:
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-செப்-201920:41:58 IST Report Abuse
Ramki திரு.தமிழ்வேள் அவர்களே, சென்னை மற்றும் தென்னக நகரங்களிலிருந்து ஐரோப்பா போகும் வழித்தடம் வேறு.அதே சமயம் வட இந்தியாவிலிருந்து போகும் போது, பாக்கிஸ்தான் வான் வெளி , ஈரான், ஈராக், துருக்கி மற்றும் கிரீஸ் வழியாக போவதுதான் shortcut .அதன் மூலம் பயண நேரமும் , எரிபொருள் செலவும் மிச்சமாகும்.அதனால் தான் அவ்வழியே செல்வதற்கு அனுமதி கேட்டு, அதனை அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.www .flightradar 24.com வெப் சைட் மூலம் உலகின் எந்த விமானத்தையும் , எந்த கண்டமாக இருந்தாலும் flight track செய்தால், விமானம் கிளம்பிய நேரம் விமானம் போகும் உயரம்,கடந்த தூரம் , பாக்கி போகவேண்டிய தூரம் , போய்ச்சேரும் நேரம் எல்லாவற்றையும் காண முடியும்.இந்த விவரம் அது குறித்து தெரியாதவர்களுக்காக பதிவு.,
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-செப்-201915:53:27 IST Report Abuse
மலரின் மகள் இது போன்று அவர்களின் செயல் சர்வதேச பாரம்பரியத்தை மீறுவதாக இருக்கிறது. நமது வெளியுறவு துறை பாகிஸ்தானிய அரசின் செயல் இப்படித்தான் இருக்கும் என்பதை நன்கே அறிந்து அதை சர்வதேசங்களுக்கு வெளிச்சமிடவும் பாகிஸ்தானை டிப்ளமேடிக் ஆகா தனிமை படுத்தவும் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மிகவும் சரியாக பயன்படுத்தி கொள்கிறது. பாகிஸ்தானுக்கு மீண்டும் சறுக்கல். அவர்கள் மட்டும் அனுமதி அளித்திருந்தால் சர்வதேச நாடுகள் வரவேற்றிருக்கும் ஆனால் உள்ளூர் மக்களை உணர்ச்சி பூர்வமாக பேசி பேசியே வைத்திருப்பவர்களுக்கு அங்கே பெரிய சங்கடமாகி இருக்கும். வேறு வழியற்று தேசத்தின் மீதான நம்பிக்கை மற்ற தேசங்கள் குறைத்தாலும் பரவாயில்லை, உள்ளூர் மக்களின் நம்பிக்கை முக்கியம் என்று இம்ரான் அரசு முயல்கிறது. தவறான வழிமுறைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X