வேகம்!:அக்., 18க்குள் அயோத்தி வழக்கு விசாரணை முடிகிறது : தனியாக மத்தியஸ்தம் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி

Updated : செப் 20, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
வேகம்!:,அக்., 18க்குள், அயோத்தி ,வழக்கு, விசாரணை,முடிகிறது : தனியாக,மத்தியஸ்தம்,நடத்த,சுப்ரீம் கோர்ட் ,அனுமதி

புதுடில்லி,'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், தினமும் நடந்து வரும் விசாரணையை, அக்., 18க்குள் முடிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான, மத்தியஸ்தம் செய்யும் குழுவின் முயற்சிகள், தனியாக நடக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நவ., 17ம் தேதிக்குள், தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கே, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகியவை, இந்த நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளும்படி, உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்,14 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சுமுக தீர்வு ஏற்படும் வகையில், மத்தியஸ்தம் செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.


இடைக்கால அறிக்கை



அதன்படி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, எப்.எம். கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பிரபல மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.இந்தாண்டு, மார்ச், 8ம் தேதி, மத்தியஸ்த குழு பேச்சு நடத்த, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜூலை, 18ல், அந்தக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தது.

பேச்சில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால், 'தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு, ஆக., 6 முதல், அயோத்தி வழக்கை, தினமும் விசாரிக்கும்' என, அறிவிக்கப்பட்டது.நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகியோரும் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.


விருப்பம்



இந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நேற்று கூறியதாவது:மத்தியஸ்த குழுவின் தலைவர், நீதிபதி, கலிபுல்லா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அயோத்தி விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்துக்கு வெளியே மத்தியஸ்தம் செய்வது குறித்து பேச்சு நடந்த, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதனால், மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை தொடரலாம். அதில் நடத்தப்படும் பேச்சுகள், ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.இந்நிலையில், இங்கு தினமும் நடைபெறும் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தினசரி விசாரணையை, அக்., 18க்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், தீர்ப்பு எழுதுவதற்கு, நான்கு வார கால அவகாசம் கிடைக்கும்.
இவ்வாறு, தலைமை நீதிபதி கூறினார்.தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம், நவ., 17ல் முடிகிறது. அதனால், அதற்குள், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palani Rajan - Hyderabad,இந்தியா
19-செப்-201911:07:11 IST Report Abuse
Palani Rajan பிஜேபி ஏற்கனவே முடிவு பண்ணிட்டாங்க... காஷ்மீர் சேர்க்கணும்/ராமர் கோவில் கட்டணும் ... தீர்ப்பு BJP கு சாதகமா வரும் .. உறுதியாக
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
19-செப்-201903:58:58 IST Report Abuse
blocked user சொதப்பாமல் இருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X