தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்

Updated : செப் 19, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
Supreme Court,Ramnath Govind, President, சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், நீதிபதிகள்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில்,தமிழகத்தைச் சேர்ந்த இமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட், கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக ஜனாதிபதி பதவி உயர்வு தந்து ஒப்புதல் அளித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
19-செப்-201917:21:59 IST Report Abuse
Ramachandran Rajagopal யார் நீதிபதியாக வந்தாலும் நாள் ஒன்றுக்கு ஐம்பது லட்ச ரூபாய் வரை கேட்கும் வழக்கறிஞர்களை நியமிக்கும் சக்தி உள்ளவர்க்கே இந்த நாட்டில் நீதி. ஏழைகளுக்கு அநீதிதான் இந்த நாட்டில்.
Rate this:
Cancel
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
19-செப்-201908:26:22 IST Report Abuse
sankar கறிக்கடை கபில் சிபல் , சாதிச்சி கிடைக்காத ஷைனி , சிங்கி அடிக்கும் அபிஷேக் சிங்கவி இவங்களுக்கெல்லாம் கிடையாதா
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-செப்-201908:13:59 IST Report Abuse
ஆரூர் ரங் Nallavan Nallavan -முன்பொரு முறை இதே அவா பிரச்னையில்தான் தமிழக அரசு குறிப்பிட்ட தகுதியுள்ள மூத்த வழக்கறிஞரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டுக்கு சொன்னது ( அப்போதெல்லாம் கொலீஜியமில்லை. மாநில அரசின் கருத்தையும் கேட்பதுண்டு ) .அப்போதைய சட்ட அமைச்சர் சொன்ன காரணம் குறிப்பிட்ட சமுதாயத்தினரை நீதிமன்றத்துக்கு நியமிப்பது இந்த மண்ணின் நீதிக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்றதல்ல என்று .இந்த அழகில் திராவிஷக் கட்சிகள்தான் சாதியொழிப்பை நிறைவேற்றுகின்றனவாம் .தமிழகத்திலிருக்குமளவுக்கு வேறெங்கும் சாதி வெறி இல்லை .ஜெயலலிதாவை வழக்கில் மாட்டிவிட்டு தண்டிக்கவைத்த சுப்ரமணியம் சாமி வேறு வகுப்பினரல்ல. ஆனால் என்னவோ அந்த இனத்தினரிடையே யாரிடமுமில்லாத அளவு ஒற்றுமை நிலவுவதாகவும் ஒதுக்கவேண்டும் எனும் பேச்சும் நீதிமன்ற வளாகத்தில் எப்போதுமுண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X