எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

25ல் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சு: தகவல்கள் திரட்டும் அதிகாரிகள்

Updated : செப் 19, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
நீர்வள பிரச்னைகளுக்கு தீர்வு காண, வரும், 25ம் தேதி, தமிழக - கேரள முதல்வர்கள் சந்தித்து, பேச்சு நடத்த உள்ளனர்.இதில், பேச வேண்டிய விபரங்கள் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், தகவல்களை திரட்டி வருகின்றனர். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் இடையே, நீண்ட காலமாக, முல்லை பெரியாறு அணை பிரச்னை உள்ளது.அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
 25ல் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சு:  தகவல்கள் திரட்டும் அதிகாரிகள்

நீர்வள பிரச்னைகளுக்கு தீர்வு காண, வரும், 25ம் தேதி, தமிழக - கேரள முதல்வர்கள் சந்தித்து, பேச்சு நடத்த உள்ளனர்.இதில், பேச வேண்டிய விபரங்கள் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், தகவல்களை திரட்டி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்கள் இடையே, நீண்ட காலமாக, முல்லை பெரியாறு அணை பிரச்னை உள்ளது.அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இதற்காக, பேபி அணையை பலப்படுத்த, கேரள அரசு, அனுமதி வழங்காமல் உள்ளது. தேக்கடியில் வாகன பார்க்கிங் அமைப்பதற்கும், கேரள அரசு முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதேபோல, நெய்யாறு அணை பிரச்னையும், நீண்ட காலமாக உள்ளது.இந்த அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் எடுத்து வர, தமிழக அரசு எடுத்த முயற்சிகள், பலன் அளிக்கவில்லை. பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்த மறு ஆய்வு பிரச்னை, நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக, 2002ல், சென்னையில் இரு மாநில அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை.

செண்பகவல்லி அணை மற்றும் கால்வாய் புனரமைப்பதற்கும், கேரள வனத்துறை அனுமதி வழங்கவில்லை. நீராறு - நல்லாறு இணைப்பு திட்டம், ஆனைமலையாற்றில் இருந்து, 2.50 டி.எம்.சி., நீரை, தமிழகத்திற்கு திருப்பும் திட்டம் ஆகியவை, கிடப்பில் உள்ளன.இது தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, தென்மேற்கு பருவ மழையால், இரண்டு ஆண்டுகளாக, கேரளா பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அங்கிருந்து உபரிநீரை, தமிழகத்திற்கு வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் வைத்து, தமிழக அரசுடன் நீர்வள பிரச்னைகள் தொடர்பாக பேச்சு நடத்த, கேரள அரசு முன்வந்துள்ளது.

இது தொடர்பாக, இரு மாநில முதல்வர்களும், வரும், 25ல் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.பேச்சின்போது, இருமாநில நீர்வள பிரச்னைகள் தொடர்பாகவும், மழையால் கேரளாவிற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளையும், தகவல்களாக திரட்டி, கேரள முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது.இதற்கான விபரங்களை சேகரிக்கும் பணிகளில், தமிழக பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், கவனம் செலுத்தி வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh - Narita,ஜப்பான்
19-செப்-201907:33:50 IST Report Abuse
Suresh கோவையின் வாழ்வாதாரமான சிறுவானி நீரை திருட்டுத்தனமாக எந்தவித தேவையுமின்றி அபகரிக்கும் உண்டியல் கூட்டத்துடன் கராராக பேசவும்.
Rate this:
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
19-செப்-201906:11:35 IST Report Abuse
Dr.T.Senthilsigamani 25ல் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சு: தகவல்கள் திரட்டும் அதிகாரிகள்.மிக நல்ல செய்தி. முல்லை பெரியாறு அணை பிரச்னை,பேபி அணை,நெய்யாறு அணை,பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்த மறு ஆய்வு பிரச்னை, செண்பகவல்லி அணை,நீராறு - நல்லாறு இணைப்பு திட்டம், ஆனைமலையாற்றில் இருந்து, 2.50 டி.எம்.சி., நீரை, தமிழகத்திற்கு திருப்பும் திட்டம் ஆகிய இருமாநில நீர்வள பிரச்னைகள் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது மட்டுமல்ல மேலே சொன்ன திட்டங்கள் போன்றதொரு மற்றோரு அருமையான திட்டமும் உண்டு . அதற்காகத்தான் இந்த பதிவு.இதனையும் தமிழக அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே விருதுநகர் மாவட்ட மக்களின் விருப்பம் .உண்மை தான் - கனமழை பெய்யும் நேரங்களில் மட்டுமாவது அத்தகைய உபரி நீரை கேரளா தமிழகத்திற்கு திருப்பி விட்டால் போதும் வெள்ளசேதங்களும் குறையும் ,உயிர் சேதங்களும் தவிர்க்கப்படும்,ஆனால் கேரளா தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது என்ற செய்தியும் வருத்தம் அடைய செய்கிறது .ஏனென்றால் கேரளாவில் உள்ள அனைத்து ஆறுகளும் குறைந்த அளவு தூரம் ஓடி அரபிக்கடலில் வீணாக கலக்கின்றன.சமீபத்தில் கேரளா நீர்ப்பாசன துறை அமைச்சர் ஆண்டு தோறும் 2000 TMC அளவு நீர் அரபிக்கடலில் கலந்து வீணாகின்றன என்று பேசியிருந்தார் .ஆனால் அதை பசித்த வாயாக இருக்கும் தமிழகத்திற்கு ,தாகம் தீர்க்க மட்டும் தரவே மாட்டார்கள் .இந்த விஷயத்தில் தேசிய கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே தமிழக நலனை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கின்றன என்பதுதான் வேதனையான செய்தி. ஆனால், மின்சாரம், அரிசி, காய்கறி, பால், பழங்கள், மணல், ... என, அனைத்துக்கும் கேரளா தமிழகத்தை நம்பியிருக்கும் கேரளம் தொடர்ந்து தண்ணீரை தர முரண்படுவது தான் வேதனை - கேரளாவில் ஆற்று மணல் எடுக்க தடை பலவருடங்களாக உள்ளது .மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கேரளாவிற்கு செல்கிறது . முல்லை பெரியாறு மட்டுமே கேரளாவில் பாயும் ஆற்று நீரை - தேவைக்கு அதிகமான நீரை மட்டும் தமிழகத்திற்கு திருப்பி விடும் திட்டமாக வெற்றிகரமாக நிறைவேறப்பட்டுள்ளது .அதற்கும் ஆயிரம் முட்டுக்கட்டைகள் போட்டது கேரளா அரசு.அனைத்தையும் உச்சநீதி மன்றம் மூலம் தகர்த்தவர் ஜெயலலிதா அவர்கள் தான்.முல்லை பெரியாறு போன்று பல பொன்னான திட்டங்கள் - அதிகமான - கனமழை நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடும் திட்டங்கள் உண்டு .அதில் ஓன்று தான் பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம் .கேரளாவின், பம்பை மற்றும் அச்சன்கோவில் நதிகளின் உபரிநீரை, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் பாயும், வைப்பாறு நதியில் இணைத்து, வறண்ட அந்த மாவட்டம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், ஏராளமான வறண்ட பகுதிகளுக்கு, நீர்பாசன வசதி அளிப்பது மற்றும் 500 மெகாவாட் நீர்மின் திட்டத்தை துவக்குவது என்பது, 12 ஆண்டுகளுக்கு முன், மத்தியில் ஆட்சியில் இருந்த, பா.ஜ., அரசின் திட்டம். இதற்காக, பம்பை - கல்லாறு நதியில், புன்னமேடு என்ற இடத்தில், 160 மீட்டர் உயர காங்கிரீட் அணை கட்டுவது. அது போல, அச்சன்கோவில் - கல்லாறு நதியில், சித்தார்மூழி என்ற இடத்தில், 160 மீட்டர் காங்கிரீட் அணை கட்டுவது. மேலும், அச்சன்கோவில் அருகே, 35 மீட்டர் உயரத்திற்கு, கிராவிட்டி அணை கட்டுவது. புன்னமேடு - சித்தார்மூழி அணைகளை இணைத்து, 5 மீட்டர் விட்டத்திற்கு சுரங்கம் வெட்டி, 8 கி.மீ., தூரம் தண்ணீரை கொண்டு சென்று, அங்கிருந்து கால்வாய் மூலம், 50.68 கி.மீட்டரில், வைப்பாறுக்கு கொண்டு செல்வது. இதற்காக, அந்த பகுதியில் உள்ள, அடவிநயினார் பகுதியில் உள்ள மேக்கரை அணையை, பயன்படுத்திக் கொள்வது என்பது தான் திட்டம்.பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்பு திட்டம். நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, 2002ல், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, முன்னுரிமை அடிப்படையில், எந்த திட்டங்களை செயல்படுத்தலாம் என, இப்போதைய ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு தலைமையிலான சிறப்பு குழு, பிரதமரிடம் அளித்த அறிக்கையில், இந்த, பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டம் இருந்தது . கேரள அரசின் எதிர்ப்பையும் மீறி, இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என, 2003ல், பிரதமரிடம், நதிகள் இணைப்பு சிறப்பு குழு, பிரதமரிடம், இரண்டாம் திட்ட அறிக்கை தாக்கல் செய்தது.இந்த திட்டம் செயல்பட்டால் தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், 2.24 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, மூன்று போக பாசன வசதி கிடைக்கும்.மற்றும் அநேக நகராட்சிகளுக்கு - ஸ்ரீவில்லிபுத்தூர் ,ராஜபாளையம் ,சிவகாசி ,விருதுநகர் ,சங்கரன்கோவில்,கோவில்பட்டி - தங்கு தடையின்றி குடி நீர் கிடைக்கும் .ஆனால் கேரளாவை மாறி மாறி ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் முட்டுக்கட்டையால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை .அது மட்டுமல்ல அதற்க்கு முடிவுரையும் எழுதப்பட்டது கேரளா காங்கிரஸ் ஆட்சியில் .தினமலர் செய்தி டிசம்பர் 6,2014 - ம்: ''பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என, கேரள அரசு, தொடர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததை அடுத்து, செயல்படுத்த உள்ள முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து, இந்த திட்டம் நீக்கப்பட்டு உள்ளது,'' என, கேரள முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான, உம்மன் சாண்டி, அம்மாநில சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.ஆம் இந்த உண்மை கூட தெரியாத தமிழக மதசார்பின்மை கூட்டணியினர் தமிழகத்தில் எந்த பிரச்சனைக்கும் மோடிஜியே காரணம் எனக்கூறி பிழைப்பு நடத்துகின்றனர். போன வாரம் எனது வார்டில் குடிநீர் வராததிற்கு மோடிஜி அரசு தான் காரணம் என முட்சந்தியில் ஊளையிட்டும் ,ஓலமிட்டும் ,சாவு ஒப்பாரிகள் வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சியினர்.இதுதான் நிதர்சனம் .பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் .காவேரி பாய்ந்த நெல் களஞ்சியம் போன்று தென் மாவட்டங்களிலும் நெல் களஞ்சியம் என வத்திராயிருப்பு தொடங்கி தூத்துக்குடி வரை கிணற்று பாசனம் இன்றி ,ஆற்று பாசனம் மூலம் ,வறண்ட பூமியை பசுமை பூமியாக மாற்றும் நல்லதொரு திட்டம்.ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் ஆம் தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என தென்னக வறண்ட மாவட்டங்கள் மாறும் .அதனை நிறைவேற்ற பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டம் உடனே நிறைவேற்ற படவேண்டும் . இதனை நிறைவேற்ற கடவுள் தமிழக மக்களுக்கு அருள் புரியட்டும் .இரு மாநில முதல்வர்களும், வரும், 25ல் சந்தித்து பேச்சு நடத்த உள்ள நிலையில் இந்த செய்திக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் .தமிழகத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த நீர் திட்டம் நிறைவேறினால் தென்தமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி சென்னை செல்வது அடியோடு குறையும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-செப்-201904:48:55 IST Report Abuse
Mani . V மிஸ்டர். பினராயி நீங்க பாட்டுக்கு தண்ணீர் அனைத்தையும் தமிழ்நாட்டுப் பக்கம் திருப்பி விட்டால், அவை அனைத்தையும் சிந்தாமல், சிதறாமல் கடலில் கொண்டு போய் சேமிப்பது எவ்வளவு கஷ்டம்? என்று அனுபவிக்கும் எங்களுக்குத்தான் புரியும். சரி, சரி தைத்த கோட்டு - சூட்டுகள் வீணாகாமல் நான் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல வேண்டும். (டேய் எடுடா வண்டியை ஸாரி விமானத்தை)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X