மாநில பெயர் மாற்றம் பற்றி ஆலோசித்தேன் : பிரதமர் மோடியை சந்தித்த பின் மம்தா பேட்டி

Updated : செப் 20, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (16+ 23)
Advertisement
மம்தா, பேட்டி, பிரதமர் மோடி, சந்திப்பு, மாநில பெயர் மாற்றம், கோல்கட்டா

புதுடில்லி:''மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றம் செய்வது பற்றி, பிரதமர் மோடியுடன் ஆலோசித்தேன்,'' என, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. மம்தா, பிரதமர், நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதிலும், முக்கிய பங்காற்றினார்.


பெங்காலி இனிப்பு



லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும், பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவதுமுறையாக, பிரதமராக பதவியேற்ற மோடியை, மம்தாவை தவிர, மற்ற மாநிலங்களின் முதல்வர்கள், டில்லிக்கு வந்து, சந்தித்துப் பேசினர்.இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, முதல்வர், மம்தா நேரம் கேட்டிருந்தார். அதன்படி, டில்லியில், மோடியை, அவரது அலுவலகத்தில், மம்தா நேற்று சந்தித்தார்.

பூங்கொத்து கொடுத்து, மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மம்தா, குர்தா மற்றும் பெங்காலி இனிப்புக்களை, பரிசாக வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி, தீபாவளி, மோடியின் பிறந்தநாள் ஆகிய நாட்களின் போது, மோடிக்கு, குர்தா மற்றும் பெங்காலி இனிப்பு வகைகளை பரிசாக வழங்குவதை, மம்தா வழக்கமாக கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய பின், நிருபர்களிடம் மம்தா கூறியதாவது:மேற்கு வங்க மாநிலம், பிர்பாம் மாவட்டம், தியோச்சா பச்சாமியில், நிலக்கரி சுரங்க பணிகளை துவக்கி வைக்க வருமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன்.


உறுதி



மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற, மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்திய மாநிலங்களில், ஆங்கில எழுத்து வரிசைப்படி, மேற்கு வங்கம் முதலிடத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே, மாநிலத்தின் பெயரை மாற்ற விரும்புகிறோம்.

இது பற்றி, பிரதமர் மோடியிடம் ஆலோசித்தேன். தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்த பிரதமர், பெயர் மாற்றம் தொடர்பாக, ஆலோசனைகளையும் வழங்கினார். இவ்வாறு, மம்தா கூறினார்.


மோடி மனைவிக்கு மம்தா புடவை பரிசு



பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க,கோல்கட்டாவில் இருந்து, நேற்று முன்தினம், விமானம் மூலம், டில்லிக்கு மம்தா பானர்ஜி சென்றார்.கோல்கட்டா விமான நிலையத்தில், மோடியின் மனைவி, ஜசோதாபென்னை எதேச்சையாக அவர் சந்தித்தார். உடனடியாக அவரிடம் சென்று, வணக்கம் தெரிவித்தார். ஜசோதாபென்னும் வணக்கம் தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம், பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பிரதமரின் மனைவிக்கு, ஒரு புடவையை, மம்தா பானர்ஜி பரிசாக அளித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் சென்றிருந்த ஜசோதாபென், அங்கிருந்து கோல்கட்டா வந்திருந்தார். அங்கிருந்து, டில்லி செல்வதற்காக, விமான நிலையம் வந்தபோதுதான், இந்த சந்திப்பு நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (16+ 23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-செப்-201915:59:11 IST Report Abuse
Endrum Indian தயவு செய்து கெஞ்சி கேட்டுக்கொள்கின்றேன் ராஜேச்வ குமாரின் பின்னாடி சி பி ஐ யை அனுப்பவேண்டாம் அப்படி ஆச்சுன்னா உண்மை தெரிந்து நான் அடுத்த தெருவிக்கு வந்து விடுவேன், ப்ளீஸ் ஹெல்ப் மீ என்று தான் பேகம் கேட்டது ஆனால் மீடியா தான் என்ன என்னவோ எழுதுகிறது, சரி தானே பேகம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-செப்-201914:18:17 IST Report Abuse
தமிழ்வேல் இளமுருகு, எடுக்கப்பட்ட பல போட்டோக்களில் (ஒரு க்ளிக் செய்தால் வீடியோபோல 15 போட்டோக்கள் பதிவாகும்) அதில் தனக்குத் தேவைப்படுவதுபோல (கமெண்ட்டுகளை எதிர்பார்த்து) செய்வதுண்டு.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-செப்-201912:47:42 IST Report Abuse
Nallavan Nallavan "எங்களை விட்டுவிடுங்கள்... வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திருணாமூல்-பாஜக கூட்டணிக்குச் சம்மதிக்கிறேன்"" என்று வங்கத்துப் பெண் புலி பம்மியிருக்குமோ??
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
19-செப்-201912:57:58 IST Report Abuse
வல்வில் ஓரி கோலி இல்லாத சோடா குடிச்சிட்டு அமைதியா திரும்ப வந்திருக்கும்......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-செப்-201914:13:35 IST Report Abuse
தமிழ்வேல் "எங்களை விட்டுவிடுங்கள்... " இதுவரைக்கும் சரி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X