பொது செய்தி

தமிழ்நாடு

பிரியாணிக்கு ஏற்ற விஜிடி-1 நெல் ரகம் அறிமுகம் வைகை அணை ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடிப்பு

Updated : செப் 19, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (8)
Advertisement
பிரியாணி, ஏற்ற, விஜிடி-1 நெல் ரகம், அறிமுகம், வைகை அணை ஆராய்ச்சி ,நிலையம், கண்டுபிடிப்பு

தேனி, கமகமக்கும் பிரியாணி, குஸ்காவிற்கு ஏற்ற சன்ன ரக விஜிடி-1 என்ற புதிய நெல்ரகம் வைகை அணை ஆராய்ச்சி நிலையத்தால் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வைகை அணையில் வேளாண் பல்கலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு 10 ஆண்டு ஆராய்ச்சியில் சம்பா, பின் சம்பாவில் பயிரிடக்கூடிய விஜிடி-1 புதிய நெல் ரகம் கண்டுபிடித்து அறிமுகம் செய்தனர்.

நிலைய துறை தலைவர் ஜூலியட்ஹெப்சிபா கூறியதாவது:ஏ.டி.டீ 43, சீரகசம்பாவையும் சேர்த்து சந்ததி வழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது விஜிடி-1 புதிய நெல்ரகம். இது நடுத்தர உயரத்துடன் செங்குத்தாக வளரும். விளைந்ததும் சாயாது. 130 நாட்களில் விளையும் மத்திய கால ரகம். அதிக விளைச்சலுடன் சன்ன ரகமாகும்.

இதனை தமிழகம், வெளிமாநிலங்கள் என 101 இடங்களில் பயிரிட்டு சோதனை செய்ததில் சராசரியாக எக்டேருக்கு 5,860 கிலோ மகசூல் கிடைக்கும். சீரகசம்பா எக்டேருக்கு 4,420 கிலோ கிடைக்கும். புதிய ரகம் அதிகபட்சம் 9,500 கிலோ வரை கிடைக்கும்.திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலுார், கரூர், கோவை, ஈரோடு, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது. இது நெல் பயிரை தாக்கும் நோய் எதிர்ப்பு திறன் உடையது. இதன் ஆயிரம் மணிகளின் எடை 8.9 கிராம்.

சன்னரக வெள்ளை அரிசி, மிதமான வாசனை, பிரியாணி, குஸ்கா செய்ய உகந்தது. சீரகசம்பா சுவையை போல் சோறு மிருதுவாகவும், உதிரியாகவும் இருக்கும்.பல மாவட்டங்களில் உள்ள ஓட்டல்களுக்கு இந்த அரிசி வழங்கி பரிசோதித்ததில் நல்ல வரவேற்பு உள்ளது. கிலோ அரிசியை 12 பேர் சாப்பிடலாம்.அரசு கெஜெட்டில் ஜனவரியில் வெளியிட்டது. அதன்பின் 3,500 கிலோ விதைநெல் உற்பத்தி செய்து 2,500 கிலோ வழங்கப்பட்டுள்ளது.தற்போது 1,500 கிலோ கையிருப்பு உள்ளது. கிலோ ரூ.35க்கு விற்கப்படுகிறது. ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
20-செப்-201913:00:21 IST Report Abuse
 nicolethomson தொடர்பு கொள்வது எப்படி ?
Rate this:
Share this comment
Cancel
19-செப்-201915:50:27 IST Report Abuse
கதிர் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
19-செப்-201908:02:51 IST Report Abuse
Balasubramanian பாஸ்மதிக்கு பதிலடி கொடுக்க இப்படி பட்ட கண்டு பிடிப்பு தேவைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X