பொது செய்தி

இந்தியா

இ - சிகரெட்டுக்கு உடனடி தடை: மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு

Updated : செப் 19, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
முடிவு, இ - சிகரெட்,என்ட்ஸ், மத்திய அமைச்சரவை, தடை

இ - சிகரெட் உட்பட, 'என்ட்ஸ்' எனப்படும், மின்னணு நிகோடின் புகைக்கும் சாதனங்களுக்கு உடனடியாக தடை விதிக்கும் வகையில், அவசர சட்டம் கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

'என்ட்ஸ்' எனப்படும் மின்னணு நிகோடின் புகைக்கும் சாதனங்களில், புகையிலைப் பொருட்கள் எரிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, திரவ நிலையில் உள்ள ரசாயனம் பயன்படுத்தப் படுகிறது. இது சூடுபடுத்தப்படுவதன் மூலம் வெளியாகும் ஆவியை, உள்ளிழுக்கின்றனர்.இ - சிகரெட், இ - ஷீஷா, இ - நிகோடின் கலக்கப்பட்ட ஹூக்கா என, இதில், பல்வேறு வகைகள் உள்ளன. இதில், அதிகம் பிரபலமானது, இ - சிகரெட்.

புகையில்லாததால், இது வழக்கமான சிகரெட்டைவிட ஆபத்து குறைவானது என, பிரசாரம் செய்யப்படுகிறது.ஆனால், 'வழக்கமாக பயன்படுத்தப்படும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விட இது மிகவும் ஆபத்தானது' என, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டில் மட்டும், 400க்கும் அதிகமான, 'என்ட்ஸ்' பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, விற்கப்படுகின்றன.


மிகவும் ஆபத்துஇந்த, 'என்ட்ஸ்' பொருட்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை அமல்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ்வர்தன் வெளிநாடு சென்றுள்ளதால், அமைச்சர்கள் குழுவின் தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான, நிர்மலா சீதாராமன், அமைச்சரவை முடிவு குறித்து, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

இ - சிகரெட் உள்ளிட்ட, 'என்ட்ஸ்' பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. புகை வராததால், இதில் ஆபத்து குறைவு என, தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இவை மிகவும் ஆபத்தானவை என்பது, பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், 30 லட்சம் பேர் இ - சிகரெட் பயன்படுத்துகின்றனர். இந்த பழக்கம், 2011ல் இருந்து சமீப காலம் வரையிலும், 900 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. அதேபோல் இதை பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை, 78 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இளைஞர்களின் உடல் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களுக்கு முழு தடை விதிக்கப்படுகிறது. வழக்கமான, பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களும் உடல் நலனுக்கு ஆபத்தானவை. அது குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.


மசோதா தாக்கல்அதே நேரத்தில், 'என்ட்ஸ்' பொருட்கள் மிகவும் ஆபத்தானவை. அதனால், 'என்ட்ஸ்' பொருட்களுக்கு முழு தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசர சட்டம் அமல்படுத்த, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான, மசோதா, பார்லி.,யின் அடுத்தக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

இந்த அவசர சட்டத்தின்படி, இ - சிகரெட் உள்ளிட்ட, 'என்ட்ஸ்' பொருட்கள் தயாரிப்பு, விற்பனை, வினியோகம், இறக்குமதி, அது தொடர்பான விளம்பரம் ஆகியவற்றுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம், சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தொடர்ந்து இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம், மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
19-செப்-201913:54:06 IST Report Abuse
Vijay D Ratnam தினம் தினம் கோடி கோடியாக பணம் புரளும் சிகரெட் கம்பெனி முதலாளிகள், தங்கள் சாம்ராஜ்யத்தை சரிக்க வரும் இ-சிகரெட் விற்பனையை விடுவார்களா.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
19-செப்-201908:34:36 IST Report Abuse
ஆரூர் ரங் ஈ சிகரெட் விற்பனையால் பாதிக்கப்பட்ட சிகரெட் கம்பெனிகள் ஐ நா வைக்கூட விலை பேசும் . நம் அரசு எம்மாத்திரம்?
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
19-செப்-201907:04:20 IST Report Abuse
kalyanasundaram WHY NOT TOTALLY BAN TOBACCO PRODUCTS AS WELL CULTIVATING TOBACCO. BANNING NARCOTICS ITEMS AND LIQUOR PRODUCTION MAY BE IN HER IMMACULATE PLAN NEXT.
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
19-செப்-201908:10:07 IST Report Abuse
RajanRajanசுடலை குடும்பம் முதல் உள்ளூர் சாராய பட்டறை நிர்வாகிகள் வரை உத்வேகம் எடுத்து டில்லி ஆர்ப்பாட்டம் போராட்டம் கும்பாட்டம் குத்தாட்டம் என கூட்ட வந்து ஆடிருவானுங்களே. இவனுங்க பொழைப்பே அந்த சாராயம் காய்ச்சுற எக்ஸ்பெர்ட் மந்திரிமார் கூட்டமாச்சே. கூடவே அந்த குட்கா அமைச்சான்மார் கூட்டம் வேற இருக்கு. எல்லாம் ஒரு வகை மாபியா பின்னணிகள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X