சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் சென்னை மாணவர் மீது போலீசில் புகார்

Updated : செப் 18, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் சென்னை மாணவர் மீது போலீசில் புகார்

ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர் ஆள்மாறாட்டம் செய்து 'நீட்' தேர்வு எழுதியது குறித்து க.விலக்கு போலீசில் கல்லுாரி முதல்வர் புகார் அளித்துள்ளார்.தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் இந்தாண்டு சென்னையை சேர்ந்த டாக்டரின் மகன் உதித் சூர்யா என்பவர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தார். நீட் தேர்வில் 385 மதிப்பெண் பெற்றதால் இந்த வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையேஉதித் சூர்யா ஆள் மாறட்டம் செய்து நீட் தேர்வு எழுதியாக மருத்துவ கல்லுாரி டீன் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் வந்தது.புகாரை பேராசிரியர்கள் குழுவினர் விசாரித்தனர். அதில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 'நீட்' நுழைவு தேர்வுஎழுதிய மாணவரின் புகைப்படமும் கல்லுாரியில் படிக்கும் மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருந்தது கண்டறியப்பட்டது.விசாரணை துவங்கியது முதல் மாணவர் கல்லுாரிக்கு வரவில்லை. அவரது பெற்றோரிடம் விசாரணை நடந்தது.இதற்கிடையே 'படிப்பை தொடரமுடியாது' என மாணவர் உதித் சூர்யா கல்லுாரிக்கு கடிதம் அனுப்பினார். இந்த மாணவர்சென்னையில் இரண்டு ஆண்டுகள் நீட் நுழைவு தேர்வு எழுதி தகுதி பெறவில்லை. மும்பையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்தது குறித்து க.விலக்கு போலீசில் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவ கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:மாணவர் உதித் சூர்யா மீது அசோக் கிருஷ்ணன் என்பவர் இம்மாதம் 11மற்றும் 13ம் தேதிகளில் மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது வந்த மாணவரும் தற்போது கல்லுாரியில் படிக்கும் மாணவரும் ஒரே நபர் தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கைரேகை பதிவு
மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர் செல்வராஜன் ஆகியோர் கூறியதாவது:தேனி மருத்துவ கல்லுாரியில் மாணவர் ஒருவர் முறைகேடு செய்தது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் விசாரணை அறிக்கை கிடைத்ததும் மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க எதிர்காலத்தில் மாணவர்களின் பெருவிரல் ரேகையும் அவர்களுக்கான அடையாளமாக பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தனிப்படை அமைப்பு : எஸ்.பி.,

தேனி எஸ்.பி., பாஸ்கரன் கூறியது: சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் மகன் உதீப்சூ1ர்யா, பெயர் தெரியாத மற்றொருவர் என இருவர் மீது ஆள்மாறாட்டம் செய்வது (419 ஐ.பி.சி.), மோசடியில் ஈடுபடுவது (420 ஐ.பி.சி.,) 120 பி (அரசுத்துறைகளை ஏமாற்றுவது) உள்ளிட்ட மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவரை பிடிக்க டி.எஸ்.பி., சீனிவாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-செப்-201911:08:07 IST Report Abuse
இந்தியன் kumar முறைகேடாய் மருத்துவம் படித்து இவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள் ?? நீட் தேர்வில் இன்னும் அதிக கவனம் தேவை .
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
19-செப்-201923:20:41 IST Report Abuse
Rajesh இப்போ தெரியுது, முன்னெல்லாம் டாக்டர் பசங்க டாக்டரே படிப்பானுங்க.......... எல்லாம் திருட்டுத்தனம் தான் போல........... இதுக்கு அந்த ஹாஸ்பிடல் முன்னாடி பிச்சை எடுத்து கௌரமா சாப்பிடலாம்.... இவர்கள் மீது கடும் குண்டர் சட்டம் போட்டு உள்ளே தள்ளவேண்டும்... தகுதியான ஓவர் மாணவனுக்கு செல்ல வேண்டியதை இவர்கள் திருடுகிறார்கள். ஏழை மாணவர்கள் தகுதியிருந்தும் சீட்டு கிடைக்காமல் தற்கொலை செய்கிறார்கள், என்ன கொடுமை இது.
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19-செப்-201912:00:16 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாருங்கள் சிலர் வீதிக்கு வந்து அந்த மாணவனுக்கு ஆதரவாக போராடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X