அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமித்ஷாவின் 'நாடு முழுவதும் ஹிந்தி' பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

Updated : செப் 19, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (76+ 157)
Advertisement
அமித்ஷாவின் ,'நாடு முழுவதும் ஹிந்தி', பேச்சுக்கு,எதிர்ப்பு வலுக்கிறது!

மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, 'நாட்டின் ஒற்றை மொழியாக, ஹிந்தி இருக்க வேண்டும்' என பேசியதற்கு, நாடு முழுதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. தேசிய, மாநில அளவிலான பல்வேறு அரசியல் கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து, நடிகர் ரஜினியும் வாய் திறந்துள்ளார். 'எந்த மொழியையும் திணிக்கக் கூடாது' என, அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, இம்மாதம், 14ம் தேதி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும், தனி முக்கியத்துவம் உள்ளது. 'ஆனால், நாடு முழுமைக்கும், ஒரு மொழி என்பது, மிகவும் அவசியம். அதிக மக்களால் பேசப்படும், ஹிந்தி மொழி தான், அந்த அடையாளத்திற்குரிய மொழி' என, பதிவிட்டிருந்தார்.

மேலும், ஹிந்தி தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில், அமித் ஷா பேசுகையிலும், இதே கருத்தை வலியுறுத்தினார். இதற்கு, ஹிந்தி பேசாத மாநிலங்களில், கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. தேசிய, மாநில கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின.

தமிழகத்தில், ஆளும் கட்சி உட்பட, அனைத்து கட்சி தலைவர்களும், தொடர்ச்சி 14ம் பக்கம்வலுக்கிறது...முதல் பக்கத் தொடர்ச்சி அமித்ஷா கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமித்ஷா, தன் கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நாளை, மாநிலம் முழுவதும், தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது. இதற்கான அறிவிப்பை, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

கேரள முதல்வர், பினராயி விஜயன், பா.ஜ.,வை சேர்ந்த, கர்நாடக முதல்வரான, எடியூரப்பா ஆகியோரும், ஹிந்தி திணிப்பை ஏற்க மறுத்தனர். கட்சி தலைவர்களை தொடர்ந்து, நடிகர் ரஜினி நேற்று, தன் கருத்தை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், அவர் கூறியதாவது:
பேனர் வைக்க கூடாது என்று, ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். சென்னையில், பேனர் சரிந்து விழுந்ததில், பலியான மென் பொறியாளர், சுபஸ்ரீ வீட்டிற்கு, இப்போதைக்கு செல்ல வாய்ப்பில்லை.

நம் நாடு மட்டுமில்லாமல், எந்தவொரு நாடாக இருந்ததாலும், பொதுவான மொழி ஒன்று இருந்தால், வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் பொதுவான மொழியை, எடுத்து வர முடியாது; எந்தவொரு மொழியையும் திணிக்கவும் முடியாது. ஹிந்தியை திணிக்க முயன்றால், தமிழகம் மட்டுமின்றி, தென் மாநிலங்கள் எதுவும் ஏற்காது. வட மாநிலங்கள் பலவற்றிலும், ஹிந்தியை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.

ஹிந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திலும், எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, 'என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; இந்தியாவின் ஒரே மொழியாக, ஹிந்தி இருக்க வேண்டும் என்று, நான் கூறவில்லை' என்று, அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.


'அரசியல் செய்வோர் செய்யட்டும்;பேச்சை மீண்டும் கேளுங்க!'



தன் பேச்சுக்கு, தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா, நேற்று அளித்துள்ள விளக்கம்:ஒரு குழந்தை நன்றாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டுமானால், அதன் தாய் மொழியில் கற்க வேண்டும். மாநில மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதைத் தான், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.தாய் மொழி என்பது ஹிந்தியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நானும், ஹிந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான். என் தாய் மொழி, குஜராத்தி.என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுஉள்ளது. அதை மீண்டும் கேளுங்கள். நம் நாட்டை ஒருங்கிணைக்கும் வகையில், ஒரு மொழி இருக்க வேண்டும். அது ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று தான் கூறினேன்.இந்த விவகாரத்தில், அரசியல் செய்வோர், தொடர்ந்து செய்யட்டும். ஹிந்தியை, இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று கோரிக்கை தான் வைத்தேன்; கட்டாயப்படுத்தவில்லை. நான் என்ன தவறாகப் பேசிவிட்டேன் என்பது எனக்கு புரியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (76+ 157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-செப்-201913:23:48 IST Report Abuse
தமிழ்வேல் ஓலை பக்கோடா, வெங்காய பக்கோடா லாம் இருக்கு.... மத்த பக்கோடாவெல்லாம் காணோமே 🤔🤔🤔
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-செப்-201901:49:34 IST Report Abuse
தமிழ்வேல் நல்லவா, "காஷ்மீருக்கு சுடலை referendum கேட்டவர், ஹிந்தியை மூன்றாவது மொழிக்கு ஏன் கேட்கலைன்னு கேட்டீங்களே.." ஹமீது ஷா ஹிந்தியை இரண்டாவது மொழியாத்தான் சொல்லி இருக்காரு. //ஹிந்தியை, இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று கோரிக்கை தான் வைத்தேன். உங்க கும்பல் சொல்ரெதெல்லாம் பொய்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-செப்-201912:50:01 IST Report Abuse
Nallavan Nallavanநான் பாஜக -வின் அபிமானிதான்... உங்கள் கும்பல் என்று மரியாதைக் குறைவாக அழைக்கவேண்டாம் .....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-செப்-201918:50:13 IST Report Abuse
Pugazh V ஹிந்தி க்கு எதிர்ப்பு என்ற தலைப்பே தவறு. ஹிந்தி திணிப்பு க்குத் தான் எதிர்ப்பு. ஹிந்தி க்கு அல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X